பிபிஎம் சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனமான டபிள்யு.என்.எஸ். (WNS),
பிசினஸ் அனாலிடிக்ஸ் துறையில் பணியுடன் ஒருங்கிணைந்த இரண்டு ஆண்டு எம்பிஏ
பாடத்திட்டத்தை வழங்க என்.ஐ.ஐ.டி பல்கலைக்கழகத்துடன் (என்.யு.) ஒப்பந்தம்
செய்துகொண்டுள்ளது. இந்தப் பாடத்திட்டத்தின் முதல் பகுதி என்.ஐ.ஐ.டி.
பல்கலைக் கழகத்தின் நீம்ரனா வளாகத்தில் அளிக்கப்படும். இதைத்தொடர்ந்து,
டபிள்யு.என்.எஸ்.-ல் என்.யு. பயிற்சியாளர்கள் மேற்பார்வையில் பயிற்சி
அளிக்கப்படும்.
"அனாலிடிக்ஸ் துறையில் வளர்ச்சி வாய்ப்பு மற்றும் தேவை அதிகமாக இருக்கிறது. 2,500 தொழில் வல்லுநர்களுக்கு மேல் பணியாற்றும் பெரிய அளவிலான ஆய்வு மற்றும் அனாலிடிக்ஸ் நடைமுறையை கொண்டிருந்தாலும், இந்தத் துறையில் திறன்பெற்ற புதியவர்கள் போதிய அளவில் உருவாவதை உறுதி செய்ய விரும்புகிறோம்" என்று டபிள்யு.
என்.எஸ். குழும சி.இ.ஓ. கேஷவ் ஆர். முருகேஷ் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் 60 மாணவர்களைக் கொண்டு இரண்டு பிரிவுக்கான சேர்க்கை நிகழும் என்றும், முதல் பிரிவுக்கான வகுப்புகள் 2016, ஜூன் மாதம் துவங்கும் என்றும் அவர் கூறினார்.
இதில் சேர, கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகளாவது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
"இந்தப் பாடத்திட்டத்தில் சேர விரும்புகிறவர்கள், தொழில்முறையாகப் பணியில் இருப்பவர்கள். அவர்கள் பயிற்சி பெற்றுக்கொள்வதற்காக பணியில் இருந்து படிக்க வருகின்றனர். இதற்கான பயிற்சிக் கட்டணம் மற்றும் உதவித்தொகை ஆகியவற்றை நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். இந்தத் தொகை, மாணவர் ஒருவருக்கு ரூ.15 லட்சமாகும். மேலும், இவர்கள் எங்கள் நிறுவனத்தில் பணிக்குச் சேரும்போது ரூ.15 லட்சம் ஆரம்ப சம்பளத்தில் இருந்து துவங்கலாம்" என்றும் அவர் கூறினார். பயிற்சி முடித்த மாணவர்கள் நிறுவனத்தின் அனாலிடிக்ஸ் செயல்பாட்டில் முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்படுவர் என்றும் அவர் மேலும் கூறினார்.
"இந்தப் பாடத்திட்டத்தில் நேரடியான கேஸ் ஸ்டடி இடம் பெற்றிருக்கும். மேலும், டபிள்யு.என்.எஸ். பயிற்சியாளர்கள் மற்றும் வல்லுநர்கள், பாடம் மற்றும் அவற்றின் தொழில் பயன்பாடு ஆகிய இரண்டையும் கலந்து பயிற்றுவிப்பார்கள்" என்று என்.ஐ.ஐ.டி. குழுமத் தலைவர் மற்றும் என்.யு. நிறுவனர் ராஜேந்திர எஸ். பவார் கூறினார். தொழிற்சாலைகளுடன் இணைந்த பாடத்திட்டங்களை வழங்கும் நோக்கத்துக்கு ஏற்ப இந்தப் பாடத்திட்டம் வழங்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
டபிள்யு.என்.எஸ். பற்றிய குறிப்பு
டபிள்யு.என்.எஸ். (ஹோல்டிங்ஸ்) நிறுவனம், சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் பிசினஸ் பிராசஸ் மேனேஜ்மென்ட் நிறுவனமாகும். இந் நிறுவனம் சுற்றுலா, காப்பீடு, வங்கி, நிதிச் சேவை, உற்பத்தி, சில்லறை வர்த்தகம், நுகர்வோர் பொருட்கள், ஷிப்பிங், லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவத்துடன் செயல்முறைத் தன்மையுடன் இணைந்த சேவைகளை, 200-க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது.
நிதி, தணிக்கை, நுகர்வோர் நலன், தொழில்நுட்பத் தீர்வுகள், ஆய்வு மற்றும் அனாலிடிக்ஸ், துறை சார்ந்த அலுவலக சேவைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பிசினஸ் பிராசஸ் மேனேஜ்மென்ட் தீர்வுகளை அளிக்கிறது. 2015, செப்டம்பர் 30டல், இந் நிறுவனம் சீனா, கோஸ்டாரிகா, இந்தியா, போலந்து, ருமேனியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, யுகே மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 39 நாடுகளில் அமைந்துள்ள சேவை மையங்களில் சுமார் 29,830 தொழில் வல்லுநர்களைக் கொண்டு செயல்படுகிறது. மேலும் விவரங்களுக்கு - www.wns.com.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக