Marque - Heading

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) "கற்பவராக இரு அல்லது கற்பிப்பவராக இரு அல்லது கற்பவருக்கும் , கற்பிப்பவருக்கும் உதவியாளனாக இரு"

வெள்ளி, 15 ஜனவரி, 2016

மத்திய அரசு நிறுவனங்கள் காலிப்பணியிடங்கள் பற்றிய விழிப்புணர்வு

எந்தவித கடினமும்  இல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு பணிகளையும் வட மாநிலத்தவர்கள் தட்டிச் செல்கிறார்கள்.இதற்கு காரணம் நம்மிடையே RRB, SSC, UPSC, IBPS, SBI, SAIL, IOCL, BHEL, BEL, BEML, INDIAN POSTAL DEPARTMENT, BANKING EXAM, DEFENCE FACTORY, ISRO...... இன்னும் இது போன்ற பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே.

     இவற்றை பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.இத்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கான விளம்பரம் வரும்போது விண்ணப்பம் அனுப்ப வேண்டும். இத்தேர்வில் வெற்றிப்பெற பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.    
    இரயில்வே தேர்வுகளில் வெற்றிப்பெறுவது மிகவும் எளிது. அதுவும் TNPSC போட்டி தேர்விற்காக படிப்பவர்களுக்கு இது இது மிக மிக எளிது. வடஇந்திய மாநிலத்தவர்கள் அதிகமானோர் தெற்கு ரயில்வேயில் பணிப்புரிகிறார்கள். இதற்கு காரணம் நாம் நம்முடைய எதிர்ப்பு தெரிவிக்காததே. நம்முடைய எதிர்ப்பு என்பது ரயில்வே தேர்வுகளில் வெற்றிப்பெறுவது மூலமாக காட்ட வேண்டும். அனைத்து இரயில்வே தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். அதில் நாம் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று பணிக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் வட இந்திய இளைஞர்களின் வருகை தானாக குறையும்.

      இரயில்வே துறை தேர்வுகளில்
வெற்றிப்பெற எளிய வழிமுறைகள்:

1.ஏற்கெனவே நடந்து முடிந்த தேர்வுகளின் வினாத்தாள்களின் தொகுப்பை (கடந்த 5-10 ஆண்டுகள்) படித்தாலே நமது வெற்றி 60% உறுதி செய்யப்பட்டு விடும்.

மீதியுள்ள 40%
2.6முதல் 10 வகுப்பு வரையுள்ள கணிதம், அறிவியல், சமூகவியல்  புத்தகங்களை மேலோட்டாமாக படித்தாலே போதுமானது.

3.நடப்பு நிகழ்வுகள்.
    இதில் விளையாட்டு, மத்திய  மாநில துறை அமைச்சர்கள், துறை தலைவர்கள், செயலர்கள், கூட்டமைப்பு, உலக அமைப்புகள், மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் சம்மந்தமான கேள்விகள் இடம்பெறும்.

4.Mental Ability Questions.
5.இரயில்வே துறை சம்பந்தமான கேள்விகள் 1 அல்லது 2.(இது NTPC தேர்வுகளுக்கு மட்டும் பொருந்தும்)

இம்முறையில் படித்தாலே RRB  தேர்வுகளில் எளிதாக வெற்றிப்பெறலாம்.

(இத்தகவல்  தமிழகத்தில் அரசு வேலை தேடும் அனைவருக்கும் சென்று சேர்ந்து SOUTHERN RAILWAY RRB ல் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். )

மாற்றம்!

முன்னேற்றம்!

2016!

 பல்வேறு பணியிடங்களுக்கான ரயில்வே தேர்விற்கு வரும் 26ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..
கடைசி தேதி சனவரி 25.
சென்னை அல்லது திருவனந்தபுரம் இரண்டில் ஒன்றிற்கு விண்ணப்பிக்கவும்.
இவற்றில் மட்டும் வினாத்தாள் தமிழில் இருக்கும்..

சென்னை மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளுக்கான காலியிடங்கள்...

1.வணிக பணி பயில்பவர்-
சென்னை (SR) - 105
திருவனந்தபுரம். - 74

2.போக்குவரத்து பணிபயில்பவர் -
சென்னை - 127
திருவனந்தபுரம் - 87

3. சரக்கு காவலர் -
சென்னை - 182
திருவனந்தபுரம் - 96

4. இளநிலை கணக்கு உதவியாளருடன் கூடிய தட்டச்சர் -
இ.பெ.தொ(ICF) -13
சென்னை - 89
திருவனந்தபுரம் - 30

5. முதுநிலை கணக்கருடன் கூடிய தட்டச்சர் -
இ.பெ.தொ ( ICF) - 3
சென்னை - 73
திருவனந்தபுரம் - 16

6. உதவி நிலைய அதிகாரி -
சென்னை - 393
திருவனந்தபுரம் - 185
மொத்தம் -
சென்னை + ICF - 969+ 16
திருவனந்தபுரம் - 498

கல்வித்தகுதி:-
பட்டப்படிப்பு முடித்தவர்கள்

வயது தகுதி :-
பொது - 18-32
ஓ.பி.சி - 18-35
SC/ST- 18-37

தேர்வு முறை :-
பொது அறிவு , கணித பாடங்களில் இருந்து 100 வினாக்கள் கேட்கப்படும்..

மூன்று தவறான வினாக்களுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.

தேர்வு நேரம் 90 நிமிடங்கள்..
தேர்வு மார்ச்- மே மாதங்களில் பல்வேறு மாவட்டங்களில் கணினி வழித் தேர்வாக நடைபெறும்..

வாழ்த்துக்கள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக