Marque - Heading

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) "கற்பவராக இரு அல்லது கற்பிப்பவராக இரு அல்லது கற்பவருக்கும் , கற்பிப்பவருக்கும் உதவியாளனாக இரு"

புதன், 20 ஏப்ரல், 2016

சிவில் சர்வீஸ் தேர்வு என்றால் என்ன?

 
சிவில் சர்வீஸ் தேர்வு என்றால் என்ன? - ஒரு பார்வை

நம் நாட்டின் எல்லா துறைகளிலும் உயரிய பதவிகளில் நியமனம் செய்யப்பட்டு நிர்வாகத்தைத் திறம்பட நடத்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிற நபர்கள்தான் குடியுரிமைப் பணியாளர்கள் (Civil Servants).
குடியுரிமைத் தேர்வுகள் என்பவை வெறும் ஐ.ஏ.எஸ். பணிக்காக மட்டுமல்ல. மொத்தம் 25 பணிகளுக்காக நடத்தப்படுகிற ஒருங்கிணைந்த தேர்வு. ஐ.ஏ.எஸ் பணிக்கு விருப்பமில்லை என்றால் அரசியலுடன் சிறிதும் சம்பந்தமில்லாத அமையப் பணிகள் (வருமான வரி, சுங்கம், ஆடிட் அண்ட் அக்கவுண்ட் சர்வீஸஸ்) போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாமே!
மத்திய தேர்வாணைக்குழு (UPSC-Union Public Service Commission) நடத்துகிற குடியுரிமைத் தேர்வுகள் மொத்தம் கீழ்க்கண்ட 23 பணிகளுக்காகத் தகுதி வாய்ந்த நபர்களை நியமனம் செய்யும் நோக்கில் நடத்தப்படுகிறது.

1.) Indian Administrative Service (I.A.S.)
2.) Indian Foreign Service (I.F.S.) 3.) Indian Police Service (I.P.S.)
4.) Indian P&T Accounts & Finance Service Group - A
5..) Indian Audit & Account Service (I.A.A.S.) Group - A
6.) Indian Customs and Central Excise Service - GP-A
7.) Indian Revenue Service GP-A
8.) Indian Ordinance Factories Service GP-'A'
9.) Indian Postal Service - GP - 'A'
10.) Indian Civil Accounts Service GP-'A'
11.) Indian Railway Traffic Service GP-'A'
12.) Indian Railway Accounts Service GP-'A'
13.)Indian Railway Personal Service GP-'A'
14.) Posts of Asst. Security Officer GP-'A' in Railway Protection Force
15.) Indian Defence Estates Service, GP-A
16.) Indian Information Service (Junior Grade) GP-A 17.) Indian Trade Service GP-A
18.) Posts of Asst. Commandent GP-A in Central Industrial Security Force
19.) Central Secrateriat Service GP-B
20.) Railway Board Secretariat Service GP-B
21.) Armed Forces Head Quarters Civil Service GP-B
22.) The Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service GP-B
23.) Pondicherry Police Service, Group - B

இத்தேர்விற்கு 21 வயது நிரம்பிய ஒரு டிகிரி முடித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும் இத்தேர்வை பற்றிய கீழ்க்கண்ட கேள்விகள் உங்கள் மனதில் எழலாம்.அவையாவன...

1.செலவு அதிகமாகுமா?
2.எவ்வளவு ஆண்டு தயாரிப்பு? 3.பயிற்சி எவ்வாறு பெறுவது? 4.தேர்வில் தோல்விக்குக் காரணங்கள் யாவை?
5.தமிழில் எழுத என்ன தடைகள்? 6.ஆங்கில அறிவு அவசியமா? 7.வயது வரம்பு தளர்வு மாணவரின் வகுப்பை பொருத்து எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
8.டிப்ளமோ படித்திருந்தால் எழுதலாமா? 9.திறந்தவெளி கல்வி முறை (Open University) செல்லுமா? 10எத்தனை முறை எழுதலாம்?
11.முதன்மைத் தேர்வு எழுதாமலிருந்தால் அது Attemptஆகக் கருதப்படுமா?
12.எவ்வாறு திட்டமிட வேண்டும்?

இவ்வினாக்களுக்குரிய விடைகள் இவ்விணைப்பில் http://taratdac.blogspot.ae/2013/06/blog-post.html முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளன.படித்து பயன் பெறுக!
.
குறிப்பு:வரும் ஆண்டிற்குள் சுமார் இரண்டேகால்(2 ¼) இலட்சம் பேருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்


 
மே 9 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்: இணையதளத்திலும் பதிவிறக்கலாம்

முஸ்லிம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்ல் 103 இடங்களும்,பல் மருத்துவப் படிப்பில் 37 இட ஒதுக்கீட்டு இடங்களும் நிச்சயம் உண்டு!அதிகமான கட் ஆஃப் மதிப்பெண்களை பெரும் அனைத்து முஸ்லிம் மாணவர்களுக்கு பொதுபிரிவிலும் இடமுண்டு என்பதை மறவாதீர்!

எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் மே 9-ஆம் தேதி தொடங்க உள்ளது. நேரடியாகவும், இணையதளத்திலும் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் ஆர்.விமலா, தேர்வுக் குழு செயலர் ஜி.செல்வராஜன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:-

விண்ணப்ப விநியோகம் குறித்த அறிவிப்பு மே 8-ஆம் தேதி வெளியிடப்படும். விநியோகம் மே 9-ஆம் தேதி முதல் தொடங்கும்.
தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை ரூ.500 செலுத்தி நேரடியாகப் பெறலாம்.

இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்பவர்கள், விண்ணப்பத்துடன் ரூ. 500-க்கான வரைவோலையை இணைக்க வேண்டும்.
விண்ணப்பத்தை அளிக்க மே 27 கடைசி: விண்ணப்பங்களைப் பெறுவதற்கு மே 26-ஆம் தேதி கடைசியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்துக்கு வந்து சேர கடைசித் தேதி மே 27 ஆகும்.

40 ஆயிரம் விண்ணப்பங்கள்: இரு படிப்புகளுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது. 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. கூடுதல் விண்ணப்பங்கள் தேவைப்பட்டால் அச்சடித்து விநியோகிக்கப்படும் என்றனர்.
மொத்த இடங்கள்: 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,655 எம்.பி.பி.எஸ்.இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் (15 சதவீதம்) 398 போக மீதம் 2,257 இடங்களும், 8 சுயநிதிக் கல்லூரிகளில் 595 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன. இதுதவிர, கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 65 இடங்கள் என மொத்தம் 2,917 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

பிடிஎஸ்: பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் போக மீதம் 85 இடங்களுக்கும், 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 970 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் என மொத்தம் 1,055 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வு எப்போது?
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஜூன் 15-ஆம் தேதி தகுதிப் பட்டியல் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து, ஜூலையில் முதல் கட்ட கலந்தாய்வும், ஆகஸ்டில் 2-ஆம் கட்ட கலந்தாய்வும் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி:தினமணி-கல்வி-20 April 2016 12:29 AM
http://www.dinamani.com/…/%E0%AE%AE%E0%A…/article3389072.ece

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

பொறியியல் பட்டதாரிகளுக்கு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இரண்டு ஆண்டு ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறைவான காலியிடங்கள் விவரம்:
பணி: பொறியாளர்.
துறை: Electronics
காலியிடங்கள்: 06
ஊதியம்: மாதம் ரூ.21,000

துறை: Mechanical
காலியிடங்கள்: 06
ஊதியம்: மாதம் ரூ.21,000

துறை: Computer Science
காலியிடங்கள்: 02
ஊதியம்: மாதம் ரூ.21,000
வயதுவரம்பு: 01.04.2016 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bel-india.com/sites/default/files/Recruitments/Webadvt-29-03-2016.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

எம்பிஏ, பொறியியல் பட்டதாரிகளுக்கு விமான ஆணையத்தில் பணி




விமான ஆணையத்தில் (ஏஏஐ) நிரப்பப்பட உள்ள 220 ஜூனியர் எக்சிகியூட்டிவ், ஏர்போர்ட் ஆபரேஷன்ஸ் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எம்பிஏ, பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஜூனியர் எக்சிகியூட்டிவ்
1. சிவில் - 50
2. எலக்ட்ரிக்கல் - 50
3. ஐ.டி.- 20

பணி: ஏர்போர்ட் ஆபரேஷன்ஸ்
காலியிடங்கள்: 100

வயது வரம்பு: 31.5.2016 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பொறியியல் மற்றும் டெக்னாலஜி துறைகளில் சிவில், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஏர்போர்ட் ஆபரேஷன்ஸ் பணியிடங்களுக்கு எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.aaiaero  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aai.aero  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

நன்றி 

http://www.dinamani.com/employment
 

திங்கள், 18 ஏப்ரல், 2016

எம்.பி.பி.எஸ். மட்டுமே மருத்துவப் படிப்பல்ல...!

பிளஸ் டூ முடித்த பின்பு எம்.பி.பி.எஸ் படித்து மருத்துவராக வேண்டும் என்பது பல்லாயிரக்கணக்கான மாணவ-மாணவியர்களின் விருப்பமாகும். பல பெற்றோர்களும் இதையே விரும்புகின்றனர். இருப்பினும் கட் ஆப் மதிப்பெண் உச்ச நிலையில் இருந்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை உள்ளது.
மருத்துவம் படிக்க அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதும் கிடைக்காமற் போவதும் ஒரு சில புள்ளி மதிப்பெண்களில்தான் என்பதே இன்றைய நிலையாகும். +2 இரண்டாமாண்டுப் பயிலும் போதே திட்டமிட்டுப் படித்தால், எந்தச் சிக்கலுக்கும் ஆட்படாமல் மனதை ஒருநிலைப்படுத்திப் படித்தால் அரசு மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீட்டில் எந்தப் பிரிவினராக இருந்தாலும் படிப்பதற்கு இடம் பெற்று விடலாம். ஒருவேளை எம்.பி.பி.எஸ்., படிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றால்?
மனம் தளர வேண்டியதில்லை. மருத்துவ படிப்புகளும், மருத்துவம் தொடர்பான படிப்புகளும் நிறைய உள்ளன:

பி.டி.எஸ் (Bachelor of Dental science):

பி.டி.எஸ் எனப்படும் பல் மருத்துவப் படிப்பிற்கும் 17 வயது நிரம்பியவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். இப்படிப்பின் கால அளவு 5 ஆண்டுகளாகும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் பல் மருத்துவம் படிக்கக் கட்டணம் குறைவு. ஆனால் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் இப்படிப்பை முடிக்க ஏறத்தாழ 12 இலட்ச ரூபாய் வரை செலவாகும். முன்பு மருத்துவம் சார்ந்த தேர்வுகளுக்கு நுழைவுத்தேர்வு இருந்தது. ஆனால் இப்போது அரசால் நடத்தப்படுவதில்லை. ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்களின் தேவைக்கு ஏற்ப நுழைவுத் தேர்வுகளை நடத்திக் கொள்கின்றன.
5 ஆண்டுகள் படிப்பில் 4 ஆண்டுகள் வகுப்பறையிலும் ஓராண்டு பயிற்சியிலும் ஈடுபடவேண்டும். 15,000 மாணவர்கள் இப்படிப்பில் வருடந்தோறும் சேர்க்கப்படுகின்றனர்.

பி.எச்.எம்.எஸ் (Bachelor of Homeopathic medicine & surgery):

பி.எச்.எம்.எஸ். எனப்படும் ஹோமியோ மருத்துவம் மற்றும் சிகிச்சைப் படிப்பிற்கு 5.5 ஆண்டுகள் தேவைப்படும். இப்படிப்பிற்கு ஏறத்தாழ நான்கு இலட்சம் ரூபாய் வரை செலவாகும்.
பி.எச்.எம்.எஸ் படிப்பு எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு மாற்றுப்படிப்பாகத் திகழ்கிறது. எம்.பி.பி.எஸ் படிப்பில் இடம் கிடைக்காதோர் இப்படிப்பில் சேர்கிறார்கள். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருத்துவமுறை இதுவாகும். 5.5 ஆண்டு படிப்பில் ஒரு வருடம் பயிற்சிக்குரிய காலமாகும்.

பி.எ.எம்.எஸ் (Bachelor of Ayurvedic medicine and surgery):

பி.எ.எம்.எஸ் எனப்படும் ஆயுர்வேத மருத்துவம் பயில விரும்புவோர் 5.5 ஆண்டுகள் படிக்க வேண்டும். ஏறத்தாழ மூன்று இலட்சம் ரூபாய் வரை செலவாகும்.
இந்தப் படிப்பு எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு மாற்றாக உள்ளது. இந்திய அரசின் மத்திய மருத்துவக் கவுன்சில் இப்படிப்பை கவனிக்கிறது. மூலிகைகள் தொடர்பான மருத்துவ முறையாகும். 5.5 ஆண்டுப் படிப்பில் ஓராண்டு பயிற்சி காலமாகும்.

பி.யு.எம்.எஸ் (Bachelor of unani medicine):

எம்.பி.பி.எஸ் படிப்பதற்கு இடம் கிடைக்காதோருக்கு மாற்று மருத்துவப் படிப்பாக பி.யு.எம்.எஸ் எனப்படும் யுனானி மருத்துவப் படிப்பு உள்ளது. ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய படிப்புகளை இந்திய அரசின் மத்திய மருத்துவக்குழு கவனிக்கிறது.
வழக்கமான 10 ஆம் வகுப்பு, +2 கல்வித் தகுதி, டழ்ங் - பண்ல் எனப்படும் படிப்பை (ஓராண்டு) முடித்திருக்க வேண்டும். உருது நுழைவுத் தேர்விலும், இந்தியில் 8ஆம் வகுப்பிற்குறிய சான்றிதழ் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பிற்குரியக் கால அளவு 5.5 ஆண்டுகளாகும்.

பி.என்.ஒய்.எஸ் (Bachelor of Naturopathy and yoga science):

பி.என்.ஒய்.எஸ் எனப்படும் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவப் படிப்புக்கு கட்டணம் ஆண்டுக்கு ரூபாய் 45 ஆயிரம் முதல் அமையும். நிறுவனங்களுக்கு ஏற்பக் கட்டண விகிதங்களும் மாறுபடும். இப்படிப்பிற்கு 5.5 ஆண்டுகள் தேவைப்படும்.

பி.வி.எஸ்சி & எ.எச் (Bachelor of veterinary science & animal Husbandry):

பி.வி.எஸ்சி எனப்படும் கால்நடை மருத்துவப் படிப்பு 5 ஆண்டுகளில் நிறைவடையும். நிறுவனத்தின் தன்மைக்கேற்ப கட்டணங்கள் மாறுபடும். மருத்துவக் கல்வியின் ஒரு பகுதியாக பி.வி.எஸ்சி & எ.எச் உள்ளது. இந்திய கால்நடை மருத்துவக் குழு இப்படிப்பை கண்காணிக்கிறது. கால்நடைகளின் உயிர்க்கூறுகள் குறித்துப் படிப்பது இக்கல்வியாகும். ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் 30-80 இடங்கள் உள்ளன. இப்படிப்பைப் படித்தால் தனியார், அரசு கால்நடை மருத்துவமனைகளில் பணி புரியலாம்.

நவீன உலகில் மனஅழுத்தம் அதிகமாகி வருவதும் வாழ்க்கை மாற்றமும் இப்படிப்பிற்கான தேவையை அதிகரித்துள்ளது. உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வது, உணவு நடைமுறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது உள்ளிட்டவை இப்படிப்பாகும். இதன் 5.5 ஆண்டு படிப்பில் ஓராண்டு பயிற்சிக் காலமாகும். பட்டயம், இளநிலை, முதுநிலை படிப்புகளை பல நிறுவனங்கள் வழங்குகின்றன. இப்படிப்பு இயற்கை உணவுமுறை குறித்து குறிப்பிடுகிறது. இப்படிப்பைப் படித்தால் தனியார், அரசு மருத்துவமனைகள் பணிபுரியலாம். வேறு சில நிறுவனங்களிலும் பணியாற்றலாம். இந்தியாவில் 10 கல்லூரிகள் இயற்கை மருத்துவம் கற்றுத் தருவதற்கு உள்ளன.
இந்தப் படிப்புகள் அனைத்துக்குமே கல்வித்தகுதி: 10, +2 படித்திருக்க வேண்டும். +2 படிப்பில் அறிவியல் பிரிவுப் பாடம் படித்திருக்க வேண்டும். உயிரியல், வேதியியல், இயற்பியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
17 வயது நிரம்பியவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

நன்றி :
http://www.dinamani.com/weekly_supplements

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

நெட்- தேர்வு

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான டிசம்பர் மாத -நெட்- தேர்வு முடிவு வெளியீடு: ஜூன் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மூலம் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட "நெட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும் ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது.

இப்போது 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கானத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வானது ஜூலை 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு www.cbsenet.nic.in என்ற இணையதளம் மூலம் செவ்வாய்க்கிழமை (ஏப்.12) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மே 12 கடைசித் தேதியாகும். தேர்வுக் கட்டணத்தை மே 13-ஆம் தேதி வரை செலுத்த முடியும்.

நன்றி:தினமணி-கல்வி 12 April 2016 03:30 AM
http://www.dinamani.com/…/%E0%AE%9F%E0%A…/article3376124.ece

மத்திய நிலக்கரி நிறுவனத்தில் 878 டெக்னீசியன்

மத்திய நிலக்கரி நிறுவனத்தில் 878 டெக்னீசியன், ஃபோர்மேன் பணி
மத்திய நிலக்கரி சுங்கத்தில் நிரப்பப்பட உள்ள 878 மைனிங் சித்தார், எலக்ட்ரீசியன், ஃபோர்மேன், மேற்பார்வையார் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Ref.No: CCL/Recruitment/Advt.032016/04
மொத்த காலியிடங்கள்: 878
பணி: Junior Overman
பணி: Mining Sirdar
பணி: Deputy Surveyor
பணி: Assistant Foreman (Electrical)
பணி: Electrician (Non-Excavation) Technician
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30.03.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ccl.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2016
ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager (Manpower-Recruitment),
Recruitment Department,
2nd Floor, Damodar Building,
Central Coalfields Limited,
Darbhanga House, Ranchi - 834 029.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ccl.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
நன்றி:தினமணி-வேலைவாய்ப்பு 12 April 2016 12:40 PM
http://www.dinamani.com/…/%E0%AE%AE%E0%A…/article3376596.ece

திங்கள், 11 ஏப்ரல், 2016

பிளாஸ்டிக் தொழில்நுட்பப் படிப்புகள்

CIPET வழங்கும் பிளாஸ்டிக் தொழில்நுட்பப் படிப்புகள் 100% வேலை உறுதி!

நம் வாழ்க்கையில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே போகிறது. பிளாஸ்டிக் இல்லாத உலகத்தைக் கற்பனையே செய்யமுடியாது என்று சொல்லும் அளவுக்கு அது இரண்டறக் கலந்து விட்டது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் 80 சதவீத பொருட்களில் ஏதோ ஒரு விதத்தில் பிளாஸ்டிக் கலந்திருக்கிறது. இச்சூழலில் பிளாஸ்டிக் தொழில்நுட்ப வல்லுனர்களின் தேவை அதிகமாகிக்கொண்டே போகிறது. ஆனால், இத்துறை குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வே இல்லை என்பதுதான் எதார்த்தம். நம் நாட்டில் பிளாஸ்டிக் தொடர்பான தொழில்நுட்பங்களைப் பயிற்றுவிப்பதற்கு என்றே ஒரு அரசுக் கல்வி நிறுவனம் இயங்குவது பலருக்குத் தெரியாது. அந்நிறுவனத்தில் உதவித் தொகையுடன் பல்வேறு குறுகிய காலப் பயிற்சிகளும், இளங்கலை, முதுகலை, பட்டயத் தொழில்நுட்பப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

‘சிப்பெட்’ என்று அழைக்கப்படும், சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளாஸ்டிக் எஞ்சினியரிங் டெக்னாலஜி (Central Institute Of Plastics Engineering And Technology) நிறுவனம்தான் இப்படியான அரிய வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகத்தால் 1968-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்வி நிறுவனம் சென்னை, மதுரை, உள்பட இந்தியாவெங்கும் 29 இடங்களில் இயங்குகிறது. இந்நிறுவனத்தில் வழங்கப்படும் குறுகியகாலப் பயிற்சிகள். இளங்கலை, முதுகலை படிப்புகள் பற்றி விவரிக்கிறார் துணை இயக்குநர் எஸ்.சுகுமார். Injection Moulding Machine Operator, Plastic Processing Machine Operator, Plastic Extrusion Machine Operator போன்ற பயிற்சிகளில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவை ஆறுமாதகால படிப்புகள்.

Plastic Processing Technology படிப்பில், எந்தப் பிரிவைப் படித்த பட்டதாரிகளும் சேரலாம். இதுவும் 6 மாத காலப் படிப்புதான். Plastic Mould Design Using Auto CAD படிப்பில் டிப்ளமோ/ பி.இ. மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர்கள் சேரலாம். இது 4 மாத காலப் படிப்பு. 6 மாத, 4 மாத காலப் படிப்புகளில் சேரும் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகைகளை வழங்குகின்றன. வெளியூரில் இருந்து வந்து தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.3,000, சென்னை, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து வந்து படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1500 உதவித்தொகையாக வழங்கப்படும். இந்தப் படிப்புகள் பேட்ச், பேட்சாக வழங்கப்படுகின்றன. மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

Diploma in Plastic Technology, Diploma in Plastic Mould Technology ஆகிய மூன்று ஆண்டுகால படிப்புகளில் சேர 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 20 வயதுக்கு உட்பட்டவர்கள் சேரலாம். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் B.E. Plastics Technology, Manufacturing Technology ஆகிய படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சிலிங் மூலம் +2 முடித்த மாணவர்கள் இப்படிப்புகளில் சேர்க்கப்படுவார்கள். Plastic Moulding Design with CAD/CAM படிப்பில் டிப்ளமோ எஞ்சினியரிங் படித்தவர்கள் சேரலாம். இது ஒன்றரை ஆண்டு காலப் படிப்பு. M.Tech. Plastic Technology/Engineering, CAD/CAM போன்ற முதுகலை படிப்புகளும் உண்டு.

Post Diploma in Plastics Mould Design with CAD/CAM, Plastics Processing and Testing, Plastic Testing and Quality Management ஆகிய முதுநிலை பட்டயப் படிப்புகளும் இங்கு உண்டு. M.Sc. Meterial Science and Technology என்ற ஐந்து ஆண்டுகால ஒருங்கிணைந்த பட்டப் படிப்பில், +2வில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களைப் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம். பிளாஸ்டிக் தொடர்பான குறுகிய காலப் பயிற்சிகள், பட்ட, பட்டயப் படிப்புகளை முடிக்கும் மாணவர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மாணவர்கள் தயக்கமின்றி இந்தப் படிப்புகளைத் தேர்வு செய்யலாம்” என்கிறார் சுகுமார். எப்படி விண்ணப்பிப்பது?

CIPET, T.V.K. Industrial Estate, Guindy, Chennai - 600 032 அல்லது Advanced Tooling & Plastics Product Development Centre (ATPDC), 35/1, 2nd Floor, Paddy and Flower Market Complex, Mattuthavani, Madurai - 625 007 என்ற முகவரியில் இருக்கும் நிறுவன வளாகங்களில் நேரடியாக விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.250. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 50. ‘Cipet, Chennai ’ என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி. எடுத்து சென்னை முகவரிக்கு அஞ்சலில் அனுப்பியும் விண்ணப்பத்தை பெறலாம். குறுகிய காலப் பயிற்சிகள் தவிர பிற படிப்புகளுக்கு ‘Joint Entrance Examination’ என்ற நுழைவுத்தேர்வு மூலமாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.5.2016. தேர்வு நடைபெறும் நாள்: 5.6.2016.

கூடுதல் விபரங்களுக்கு துணை இயக்குனர் சுகுமாரைத் தொடர்பு கொள்ள: 98407266400

நன்றி:- எம்.நாகமணி .தினகரன் -கல்வி 4/7/2016 10:47:11 AM
http://kalvi.dinakaran.com/…/CIPET_offering_courses_in_plas…

ஓவியம் & வண்ணம் தீட்டும் போட்டி



ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

மேலாண்மை படிப்பை வெளிநாட்டில் மேற்கொள்ள

மேலாண்மை படிப்பை வெளிநாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நம்மவர்களிடம் அதிகம். எனவே, எம்.பி.ஏ., படிப்பிற்கு வெளிநாடுகளில் எந்தமாதிரியான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்வது நன்மை பயக்கும்.

1.THE LONDON BUSINESS SCHOOL WOMEN SCHOLARSHIP
வெளிநாட்டில் MBA படிக்க விரும்பும் தகுதியுள்ள மகளிருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பிரிட்டனிலுள்ள லண்டன் பிசினஸ் ஸ்கூல் என்ற கல்வி நிறுவனம் இதை வழங்குகிறது.
மதிப்பு - முதல் வருட கட்டணம் இதில் அடங்கும்.
விபரங்களுக்கு www.london.edu/programmes/mba/scholarships.html

2.SGU COMMONWEALTH JUBILEE SCHOLARSHIP PROGRAMME
பிரிட்டனிலுள்ள செயின்ட் ஜார்ஜ் பல்கலையில் முதுநிலை மேலாண்மை படிப்பை மேற்கொள்ள விரும்பும் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, இந்த திட்டத்தின்கீழ் மொத்தம் 60 உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.
செயின்ட் ஜார்ஜ் பல்கலை இந்த உதவித்தொகையை வழங்குகிறது.
மதிப்பு - ஒட்டுமொத்த கல்விக் கட்டணமும் அடங்கும்.
விபரங்களுக்கு www.sgu.edu/financial-services/grad-scholarships.html

3.THE DISTINGUISHED FELLOWS PROGRAMME
சிகாகோ பல்கலையின் பூத் ஸ்கூல் ஆப் பிசினஸ் பெல்லோஷிப், அக்கல்வி நிறுவனத்தில் பயிலும் திறன்வாய்ந்த மாணவர்களுக்காக வழங்கப்படுகிறது.
சிகாகோ பல்கலையின் பூத் ஸ்கூல் ஆப் பிசினஸ் கல்வி நிறுவனத்தால் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மதிப்பு - 2 ஆண்டுகளுக்கான முழுநேர கல்விக் கட்டணம் மற்றும் ஒவ்வொரு ஆண்டிற்கும் 20,000 டாலர்கள் உதவித்தொகை உள்ளிட்டவை இதில் அடங்கும்.
விபரங்களுக்கு www.student.chicagobooth.edu/group/distinguished fellow/index.html

4.STIRLING MASTER OF BUSINESS ADMINISTRATION (MBA) SCHOLARSHIP
பிரிட்டனின் ஸ்டிர்லிங் பல்கலையில் முழுநேர எம்.பி.ஏ., படிக்கும் நபர்களுக்காக, 2 உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.
ஸ்டிர்லிங் பல்கலைக்கழகம் இந்த உதவித்தொகையை வழங்குகிறது.
மதிப்பு - கல்விக் கட்டணத்திலிருந்து, 7,700 பிரிட்டன் பவுண்டுகள் தள்ளுபடி செய்யப்படும்.
விபரங்களுக்கு www.stir.ac.uk/postgradu…/financial-information/scholarships

5.FORTE FELLOWSHIP
அமெரிக்காவின் எம்.ஐ.டி., சோலன் மேலாண்மை கல்வி நிறுவனத்தில், மேலாண்மை படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் பெண்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதைப் பெற, மாணவிகள் சிறப்பான தலைமைத்துவ பண்பை வெளிப்படுத்த வேண்டும்.
MIT சோலன் கல்வி நிறுவனம் இதை வழங்குகிறது.
மதிப்பு - கல்விக் கட்டணத்தில் பாதியளவு தொகை தள்ளுபடி செய்யப்படுவதோடு, மாணவர்களின் தேவைக்கேற்ப 1,000 அமெரிக்க டாலர்கள் முதல் 5,000 அமெரிக்க டாலர்கள் வரை வழங்கப்படும்.
விபரங்களுக்கு www.fortefoundation.org/site/PageServer?pagename=why_fellows
நன்றி:தினமலர்-கல்விமலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp…


செவ்வாய், 5 ஏப்ரல், 2016

திருப்பூர் நகரில் புதிய இஸ்லாமிய பள்ளி துவங்கப்பட்டது

திருப்பூர் நகரில் புதிய இஸ்லாமிய பள்ளி
துவங்கப்பட்டது
அத் தஃக்வா இஸ்லாமிக் ஸ்கூல்
இஸ்லாமிய மார்க்கத்தையும் அரசின்
பாடத்தையும் இணைத்துக் கற்றுத் தரும்
பள்ளி
ஒத்துப் போகும் கருத்தில் ஒருங்கிணைந்துள்ள
11 சகோதரர்களின் இலாப நோக்கமில்லா
முயற்சியால் இஸ்லாமியப் பள்ளி உருவாகி உள்ளது
முஸ்லிம் உம்மத்திற்கு நன்மை பயக்கும் செயலை
யார் செய்தாலும்...... இயக்கம் மற்றும் கொள்கை
வேறுபாட்டை மறந்து ஆதரிக்கும் நல்ல எண்ணம்
சமுதாயத்தில் வளர்ந்து வருகிறது
அல்ஹம்ந்துலில்லாஹ்




உலகம் வியக்கும் முஸ்லிம் விஞ்ஞானிகள்...

உலகம் வியக்கும் முஸ்லிம் விஞ்ஞானிகள்...
பெயர்:- அபுல் காஸிம் அல் ஜஹ்ராவி (ஆங்கிலத்தில் அல்புகாசீஸ் –Albucasis என்றழைக்கப்படுகிறார்)
வாழ்ந்த காலம்: (கி.பி.936-1013)
சிறப்புகள்:-அறுவை சிகிச்சையின் தந்தை (Father Of Surgery) என்றழைக்கப்படுகிறார். மகளிர்,மகப்பேறு மருத்துவத்தின் முன்னோடி இவரே! கருவில் இறந்த சிசுவை வெளிக்கொணர்ந்த முதல் மருத்துவரும் இவரே.




நன்றி:Islam Ashiq

நன்றிக் கடன்.....

 நன்றிக் கடன்.....
*******************
கல்வி மற்றும் மருத்துவம் மனிதனின்
மூலாதாரமான இரண்டு துறைகள்
வரலாறு முழுவதும் முஸ்லிம்
ஆட்சியாளர்கள் மற்றும் தனி நபர்கள்
அனைவரும் கல்வியையும் மருத்துவத்தையும்
சேவையாக இறைவனுக்கு செய்கின்ற
வழிபாடாகவே செய்துள்ளனர்


தமிழக முஸ்லிம்களில்
வள்ளல்களாக வாழ்ந்து மறைந்துள்ள
முந்தைய தலைமுறை இரத்தம் சிந்தி
உழைத்து உண்டாக்கிய சொத்துக்களை......
அள்ளிக் கொடுத்த கொடையின் அடையாளம் தான்
இன்று வளர்ந்து நிற்கும்......


வாணியம்பாடி இஸ்லாமியாக் கல்லூரி
அதிரை காதிர் மொய்தீன் கல்லூரி,
சென்னை புதுக்கல்லூரி
திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி
உத்தம பாளையம் கருத்த ராவுத்தர் கல்லூரி
பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
இளையான்குடி ஜாகிர் ஹுசைன் கல்லூரி
போன்ற கலை அறிவியல் கல்லூரிகள்
தியாகத்தின் அடையாளமாக நிற்கும்
இந்தக் கல்வி நிறுவனங்களில் படித்து
இப்போது பொருளாதாரத்தில் வளர்ந்து
நிற்கும் இன்றைய தலைமுறை திருப்பி
இந்த சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு
இரண்டு மடங்காக செய்ய கடமைப்பட்டுள்ளது
அது தான் நன்றிக் கடன். 


அப்போது கூட அவர்களின் தியாகத்தை
நெருங்க இயலாது.
அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வரும் சூழலில்
தமிழக மக்களுக்கு இலவசமாக கல்வி வழங்கும்
பொறுப்பை முஸ்லிம்கள் முன்னெடுக்க வேண்டும்.
அதற்கு இன்றைய தலைமுறை தங்களது
சொத்துக்களை தியாகம் செய்ய முன்வர வேண்டும்
-cmn saleem

டி.என்.பி.எஸ்.(TNPSC) சியில் வெற்றி பெற உதவும் ஆண்ட்ராய்டு போன் ஆப்!

இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளுக்கு எக்கச்சக்க வழிகாட்டுதல்கள் உண்டு. ஆக, ஒப்பீட்டளவில் நம் தமிழ்நாட்டுக்குள் நடக்கும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு ஆப்கள் மிகக் குறைவே. அந்த வகையில் அதிகம் போட்டியின்றி முன்னிலை வகிக்கிறது இந்த ஆப். டி.என்.பி.எஸ்.சி தேர்வு பற்றிய அடிப்படைத் தகவல்கள், அதற்கான சிலபஸ், தினந்தோறும் பயிற்சித் தேர்வு, மாதிரி வினாத்தாள், பள்ளிப் பாடங்களில் இருந்து குறிப்புதவிகள் என அத்தனையும் இதில் வரிசை கட்டி நிற்கின்றன. தமிழகத்தின் முன்னணிப் போட்டித் தேர்வுக்கு முதன்மையான வழிகாட்டி!

https://play.google.com/store/apps/details?id=nithra.tnpsc

 

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

உங்கள் பெண் பிள்ளையை கல்விச் சிந்தனையாளராக உருவாக்க ஒரு வாய்ப்பு

உங்கள் பெண் பிள்ளையை
கல்விச் சிந்தனையாளராக
உருவாக்க ஒரு வாய்ப்பு
*******************************
சமூகத்தின் சிந்தனையை செதுக்கும்
ஆற்றல் கல்வித் துறைக்குத் தான்
இருக்கிறது


மனித நாகரீகத்தை மேம்படுத்தும்
மிக உயர்வான கல்வி முறையை
வடிவமைக்கும் தகுதி இந்த உலகில்......
.....இறைவேதத்தையும் இறைத்தூதரின்
வழிகாட்டுதலையும் அறிவாக பெறும்
முஸ்லிம்களுக்குத் தான் இருக்கிறது
ஆனால் முஸ்லிம்கள் அந்த தகுதியை
வளர்த்துக் கொள்ளாததால்...... அறிவுக்
குறைபாடுடைய அறிஞர்கள் கையில்
இந்த உலகின் கல்வித்துறை சிக்கியுள்ளது

அறிவுத்துறையை செழுமைபடுத்த
மனித குலத்தின் சிந்தனையை
செம்மைபடுத்த ஏராளமான முஸ்லிம்
கல்விச் சிந்தனையாளர்களை உருவாக்க
வேண்டும்

அதன் முன்முயற்சியாக அம்மாபட்டினம்
அன்னை கதீஜா கலை அறிவியல்
மகளிர் கல்லூரியில் இந்த ஆண்டு முதல்
கல்வியியலில் முதுகலை படிப்பு ( M.A. Education)
துவங்கப்பட்டுள்ளது

முஸ்லிம் பெண் சமூகத்திலிருந்து
கல்விச் சிந்தனையாளர்களை உருவாக்க வேண்டும்
என்ற குறிக்கோளோடு இதன் பாடத்திட்டம்
வடிவமைக்கப்பட்டுள்ளது

* இஸ்லாமிய கல்வித் தத்துவம்
* பிற மதங்களின் கல்வி கொள்கை
* முஸ்லிம் அறிஞர்கள் மற்றும்
இந்திய / உலக அறிஞர்களின் கல்விச் சிந்தனைகள்
* இந்திய / உலக கல்வி அமைப்பு
* பள்ளி கல்லூரி நிர்வாகம்
* தலைமைத்துவ பண்புகள்

.....போன்ற சிறப்புப் பாடங்களுடன்
2 ஆண்டு படிப்பாக துவங்கப்படுகிறது
20 மாணவிகள் மட்டும் இதில் சேர்கப்படுவார்கள்
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள்
இதில் சேர தகுதியுடையவர்கள்

மேலும் விபரம் அறிய :
7598461650


செவ்வாய், 8 மார்ச், 2016

மத்திய பட்ஜெட்டில் கல்வி




 
 



எழுத்து பற்றிய அறிவின் முக்கியத்துவத்தை பழைய தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. பிச்சை எடுத்தாவது படித்துவிடுங்கள் என்று மிகவும் தீவிரமாக அவை பேசுகின்றன. ஆனால், இந்தியாவில் அப்படியான ஒரு தீவிரத்தோடு எல்லோரிடையும் இன்னும் எழுத்தறிவு பரவவில்லை. மெல்லத்தான் தவழ்ந்து கொண்டிருக்கிறது. 

பட்ஜெட்டில் கல்வி
 
ஆண்டு தோறும் மத்திய அரசானது போக்குவரத்து துறை முதல் விண்வெளி துறை வரை பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கும். அந்த வகையில் மத்திய அரசின் 2016 -17க்கான பட்ஜெட் வெளியாகியுள்ளது. இப்படி பட்ஜெட்போடும்போது தேசத்தின் ஆண்டு வருமானத்தில் குறைந்தபட்சம் ஆறு சதவீதத்தை கல்விக்காக செலவிடவேண்டும் என்று காலங்காலமாக கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனாலும் இதுவரையிலும் அது நடைபெறவில்லை. இந்த பட்ஜெட்டிலும் அது அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் இந்த முறை மத்திய அரசின் பட்ஜெட் வெளிப்படுத்துகிற உணர்ச்சி வழக்கமானதானதை விட வித்தியாசமானது. 

வளையும் கொள்கைகள் 

மத்திய திட்டக்கமிஷன் 2014-ல் ஒழிக்கப்பட்டதும் அதற்கு பதிலான அமைப்பாக நீதி ஆயோக் அமைக்கப்பட்டதும் இந்தியாவின் பொருளாதாரத் திட்டமிடலில் ஒரு கொண்டை ஊசி வளைவுப் பாதை. இந்தப் பாதையில் மத்திய அரசு பயணிப்பதால் தேசிய அளவில் திட்டங்களை உருவாக்கும் கட்டமைப்புகள் மாறி வருகின்றன. 

இத்தகைய மாற்றங்களின் காரணங்களில் 2011-ல் அமைக்கப்பட்ட பி.கே. சதுர்வேதி கமிட்டியும் ஒன்று. மத்திய அரசு நடத்தும் நல்வாழ்வுத் திட்டங்களை மிகவும் விரிவாக அது ஆய்வு செய்துள்ளது. அவற்றை மாநில அரசுகளின் பொறுப்புகளுக்கு மாற்றவேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை அளித்துள்ளது. 

மத்திய வரிகள் மூலமாக கிடைக்கும் பெருமளவிலான பணத்தை 2015 முதல் 2019 வரையான ஐந்தாண்டில் மாநில அரசுகளோடு மத்திய அரசு பகிர்ந்துகொள்ள வேண்டும் என 2013-ல் டாக்டர் ஒய்.வி. ரெட்டி தலைமையில் உருவான 14 வது நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 

கல்வி உரிமைக்கான நிதி
 
இத்தகைய பின்னணியில் கல்விக்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகி உள்ளன. மத்திய அரசு தனது திட்டங்களை கைவிடுதல், மாநில அரசுகளிடம் ஒப்படைத்தல் எனும் பாணியை வேகப்படுத்தியுள்ளது. ஒரேயடியாக அதைச் செய்தால் மக்களிடம் கோபம் ஏற்பட்டுவிடுமோ என்ற தயக்கத்தால் மெதுவாக அதை செய்துவருகிறது.
கல்வி உரிமைச் சட்டத்தை அமலாக்குவதற்காக உருவானதுதான் அனைவருக்கும் கல்வி திட்டம். இந்த பட்ஜெட்டில் அந்த திட்டத்துக்கு 22,500 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. போன வருடத்தை விட 2.2 சதவீதம்தான் இது அதிகம். 

செஸ் தரும் கல்வி
 
வருமான வரி செலுத்துகிற தனிநபர்களும் நிறுவனங்களும் தங்களது வருமானத்தில் மூன்று சதவீதத்தை கல்விக்கான செஸ் வரியை செலுத்த வேண்டும் என்பது 2004 முதல் இந்தியாவில் செயல்படுத்தப்படுகிறது.
அந்த செஸ் வரி மூலம் வரும் வருமானம் மத்திய அரசு கல்விக்காக அறிவித்துள்ள தொகையில் 65 சதவீதம் இருக்கும். மத்திய அரசின் உதவித்தொகையாக 29 சதவீதமும் ஆறு சதவீதம் வெளி உதவிகள் மூலமாகவும் ஏற்பாடு செய்யப்படும். 

பாழடையும் கட்டமைப்பு
 
கல்வி உரிமைச் சட்டத்தின்படியான உள்கட்டமைப்புத் தேவைகளை இந்தியாவில் 8 சதவீதப் பள்ளிகளே கொண்டுள்ளன. 8.3 சதவீத பள்ளிகளில் 1 ஆசிரியர் தான் இருக்கிறார்கள். ஆறு முதல் 14 வரையிலான வயதில் உள்ள ஏறத்தாழ 4 கோடியே 30 லட்சம் குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருக்கின்றனர். இந்த வயதிலான மொத்தக் குழந்தைகளில் இவர்கள் 100க்கு 18 பேர்.

2016-17 க்கான பட்ஜெட் அறிவிப்பு கல்விக்கான ஒதுக்கீட்டை 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அடிப்படையான கட்டமைப்புத் தேவைகளுக்கும் ஆசிரியர் பயிற்சிக்கும் ஆசிரியர்களின் தேவைக்கும் 510 கோடி ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பெண் கல்வி
 
பெண்குழந்தைகளுக்கான கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக நிறைய திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வந்தது. அதில் ஒன்றாக, பேட்டி பச்சோவ் பேட்டி பதோவ் ( பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தையை பாதுகாப்போம்) என்னும் திட்டமும் இருக்கிறது. அதற்கு மட்டும் 100 கோடி ஒதுக்குவோம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தவிர மற்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடுகள் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி பட்ஜெட் எதுவும் சொல்லவில்லை. மவுனமாக இருக்கிறது. 

கல்வி எனும் மூலதனம்
 
உயர்கல்விக்காக ஒரு நிதி நிறுவனத்தை மத்திய அரசு ஆரம்பிக்க உள்ளது. அதற்கு ஆரம்ப முதலீடாக 1000 கோடி ரூபாய்களை போடப் போகிறார்கள். அந்த நிதியை மேலும் மேலும் பெருக்க நன்கொடைகளும் சமூக பொறுப்புணர்வு செயல்பாட்டுக்காக பெருநிறுவனங்கள் ஒதுக்கும் நிதிகளும் பெற்றுக்கொள்ளப்படும். 

புதியதாக 62 நவோதயா பள்ளிகள் அமையும்.
 
தொழில் முனைவோருக்கான கல்வியும் பயிற்சியும் 2200 கல்லூரிகளுக்கும் 300 பள்ளிகளுக்கும் 500 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கும் 50 குறுகிய கால தொழிற்பயிற்சியகங்களுக்கும் ஆன்லைன் பாடங்கள் வழியாக பயிற்சியளிக்கப்படும் என்று பட்ஜெட் அறிவித்துள்ளது.
கல்விக்காக செலவழிப்பது ஒரு மூலதனம்தான் என்பது சாமானியர்களுக்குத் தெரியும். ஒரு நாட்டின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் நிதியைப் போலவே முக்கியமானது கல்விக்கான ஒதுக்கீடும். அவ்வளவு முக்கியமானதாக அது மாறும்போதுதான் நாடு வலிமை படைத்த பாரதம் ஆகும்! 

இந்தியாவில் எழுத்தறிவு
 
2011 மக்கள் தொகை தகவல்கள் படி இந்தியாவில் தனது பெயரை எழுதத் தெரிந்தவர்கள் 100க்கு 74 பேர். அவர்கள் உயர்சாதிகளில் அதிகமாகவும் பழங்குடிகளில் மிக குறைவாகவும் உள்ளனர்.
இந்தியாவில் எழுத்தறிவில் முன்னேறியுள்ள முதன்மையான மாநிலம் கேரளாதான். அது தனது மாநிலத்தில் 100க்கு 94 பேருக்கு (93.91 சதவீதம்) எழுத்தறிவைத் தந்துவிட்டது. நாம் 100க்கு 80 பேருக்கு (80.33 சதவீதம்) நமது மாநிலத்தில் எழுத்தறிவைத் தந்துள்ளோம். எழுத்தறிவு உள்ள மாநிலங்களின் வரிசையில் இந்தியாவில் 14 வது மாநிலமாக இருக்கிறோம்.
மத்திய அரசின் பிரதேசமாக இருந்து வருகிற புதுச்சேரி பிரதேசம் தனது மக்களில் 100க்கு 87 பேரை (86.55 சதவீதம்) படிக்க வைத்துள்ளது. இந்திய அளவில் தமிழகத்தைவிடவும் முன்னதாக 7 வது இடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவின் தேசிய எழுத்தறிவு சராசரியான 74.04 சதவீதத்தை விட தமிழகமும் புதுச்சேரியும் முன்னேறியே உள்ளன. 

http://tamil.thehindu.com/general/education

வியாழன், 3 மார்ச், 2016

பி.எட்., படிக்க வேண்டுமா...?

சென்னை: தொலைநிலைக் கல்வியில் பி.எட். படிக்க விரும்புவோருக்காக மாணவர் சேர்க்கையை அறிக்கையை கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இப்படிப்பில் சேர இளநிலை அல்லது முதுநிலையில் (தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணினி) போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது ஆசிரியராக பணியில் இருக்க வேண்டும்.

பி.எட்., படிக்க வேண்டுமா...? பாரதியார் பல்கலை அழைக்கிறது!! 
 
பொருளாதாரம் மற்றும் வணிகவியல் போன்ற துறையில் முதுநிலை பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள், இளநிலையிலும் அதே துறை பிரிவில் பட்டம் பெற்றிருப்பது அவசியம். அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில், ஆசிரியர் கல்வி படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
 
இந்தப் படிப்பில் சேர விண்ணப்பம் செய்வதற்கு மார்ச் 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.b-u.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

ஜிப்மர் நுழைவு தேர்வு விண்ணப்பம்

ஜிப்மர் நுழைவு தேர்வு விண்ணப்பம்: 7ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு. 

 

ஜிப்மரில் எம்பிபிஎஸ் சேர ஆசையா...? மார்ச் 7 முதல் ஆன்-லைனில் விண்ணப்பம்!!

ஜிப்மர் நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள் வரும், 7ம் தேதி முதல், ஆன்லைனில் வினியோகிக்கப்பட உள்ளது.புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், 200 எம்.பி.பி.எஸ்., இடங்கள்உள்ளன. இந்த இடங்களுக்கு ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு
மூலம், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்தாண்டிற்கான, ஜிப்மர் நுழைவு தேர்வு வரும் ஜூன் மாதம், 5ம் தேதி, 75 நகரங்களில் காலை, 10:00 மணி முதல், 12:30 மணி வரை நடக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலம், விண்ணப்ப வினியோகம் வரும், 7ம் தேதி துவங்குகிறது.தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை, நாகர்கோவில், திருச்சி, துாத்துக்குடி, நெய்வேலி, நாமக்கல் மற்றும் புதுச்சேரியில் நுழைவுத் தேர்வு நடக்கிறது. ஆன்லைன் மூலம், மே மாதம், 4ம் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். நுழைவு தேர்வு கட்டணம்: பொது பிரிவு, ஓ.பி.சி., - ஓ.சி.ஐ., பிரிவினர் விண்ணப்பபடிவ கட்டணமாக, 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., விண்ணப்ப கட்டணம்,'நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு' வாயிலாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

கூடுதல் விவரங்களுக்கு jipmer.edu.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

புதன், 2 மார்ச், 2016

தேர்வுக்கு உற்சாகமாகப் புறப்படுங்கள்



பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வந்துவிட்டது. மாணவர்களெல்லாம் புத்தகமும் கையுமாகப் பரீட்சை எழுதும் நாளை எண்ணிப் பரபரப்பாக இருப்பீர்கள். “நாம படிக்காமல் விட்ட சேப்டர்ல இருந்து நிச்சயம் கேள்வி வரும்னு சொல்லிக்கிறாங்கடா… இப்ப தலையும் புரியல காலும் புரியல” என நண்பர்களுக்குள் பதற்றமாகப் பேசிக்கொண்டிருப்பீர்கள்.
“முக்கியமான பாடங்களை யெல்லாம் படிச்சுட்டோமா?”
“ரொம்பவும் கஷ்டம்னு விட்ட பகுதியையும் மனப்பாடம் செஞ்சாவது எழுதிடலாமா?” 

“எது கஷ்டமான பாடமோ அதை மட்டுமே திரும்பத் திரும்பப் படிச்சிக்கிட்டிருந்தா நல்லா படிச்ச பகுதிகள் மறந்துபோய்டுமோ?” …
இப்படி ஏகப்பட்ட கேள்விகளும் பயங்களும் மூளையைத் துளைக்கின்றனவா? எவ்வளவுதான் படித்து அத்தனை பாடங்களையும் எழுதிப் பார்த்துப் பிழைதிருத்தம் செய்து தயார்நிலையில் இருந்தாலும் ஒருவிதமான படபடப்பு இருக்கத்தான் செய்கிறது அல்லவா! இந்தப் பதற்றத்திலிருந்து எப்படி விடுபட? இதோ சில எளிய வழிகள்.
பயம் எதற்கு? 

முதலாவதாக இறுதிப் பரீட்சை எழுதப்போகிறோம் என்ற நடுக்கத்தை உதறித்தள்ளுங்கள். நீங்கள் பல முறை படித்து, உங்கள் வகுப்புத் தேர்வுகளில் எழுதிப் பார்த்து, மீண்டும் மீண்டும் படித்த பாடங்களைத்தான் இப்போது பொதுத் தேர்வு என்ற பெயரில் எழுதப்போகிறீர்கள். ஒரே வித்தியாசம், இப்போது பரீட்சை வேறு பள்ளியில் நடக்கவிருக்கிறது.
தேர்வு தொடங்கவிருக்கும் நிலையில் என்ன செய்யலாம்? கிட்டத்தட்ட எல்லாப் பாடப் பிரிவுகளையும் பல முறை படித்திருப்பீர்கள். இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால் முதலாவதாகத் தொடங்கும் பரீட்சையைக் கடைசியில் படியுங்கள். 

குறிப்பு எடுக்கலாம்
அதிகாலை என்பது அமைதியான வேளை என்பதால் படிக்கும்போது உடலும் மனமும் ஒருமுகப்படும். இதனால் படிக்கும் அத்தனை விஷயங்களும் நன்றாக மனதில் பதியும். அதே வேளையில் போதுமான ஓய்வும் அத்தியாவசியம். உங்கள் புத்தகங்களை விரித்துவைத்துப் படிக்கப் போதுமான இடம், சரியான வெளிச்சம், சவுகரியமான நாற்காலி இருந்தால் சிறப்பு. முக்கியமாக கவனச் சிதறல் உண்டாக்கும் கணினி விளையாட்டு, வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்றவை பார்வையில் படாமல் இருந்தால் நல்லது. சிலர் மெல்லிய இசையைக் கேட்டுக்கொண்டே படித்தால் ஆழமான வாசிப்புக்கு உதவும் என்பார்கள். ஆனால் பொதுவாக அமைதியான சூழல்தான் நல்லது.
படிக்கும்போதே குறிப்பு எடுப்பது, ஃபுளோ சார்ட் வரைதல், விளக்க வரைபடங்கள் வரைதல் ஆகியவை சிறப்புச் சொற்களை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள உதவும். ஃபுளோ சார்ட் என்பது ஒரு தலைப்பின்கீழ் இடம்பெற வேண்டிய முக்கியத் தகவல்களைத் தனித் தனிப் பெட்டிகளில் துணைத் தலைப்புகளின் கீழ எழுதுவதாகும். அதே நேரத்தில் அவை ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டிருக்கும் வரிசையில் பிரித்தும் சேர்த்தும் எழுதுவதாகும். இறுதிக் கட்டத் தயாரிப்புக்கு இவை மிகவும் கைகொடுக்கும். சரசரவென அத்தனை குறிப்புகளையும் புரட்டிப் பார்த்தாலே போதும்; படித்த அத்தனையும் நினைவுக்கு வந்துவிடும். 

குழுவாகக் கற்கலாம்
கடந்த ஆண்டு கேள்வித் தாள்களை வைத்து மாதிரித் தேர்வுகள் எழுதலாம். இதன் மூலம் பரீட்சை எழுதிய உணர்வு முழுமையாகக் கிடைக்கும். குறிப்பிட்ட கால வரையறையில் எழுதிப்பார்க்கும்போது உங்களுடைய நேர நிர்வாகத்தைச் சரிபார்த்துக்கொள்ளலாம். இப்படி எத்தனை மாதிரித் தேர்வுகள் எழுதுகிறீர்களோ அந்த அளவுக்குத் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
இதில் பெற்றோருக்கும் முக்கியப் பங்குண்டு. குழந்தைகளுக்குப் பக்கபலமாக இருந்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. தேர்வுக்குத் தயாராகும் குழந்தைகளுக்குப் போதுமான ஓய்வு தேவை என்பதை அவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
குழு கற்றல் முறை மாணவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் ஊட்டும். நண்பர்களோடு சேர்ந்து படிக்கும்போது பாடத்தில் உள்ள சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம், கடினமான கருத்து களை எளிதில் கலந்துரையாடிப் புரிந்துகொள்ளலாம். ஆனால் சிலருக்குக் குழுவாகப் படிக்கும்போது விளையாட்டுத்தனம் மேலோங்கும். அப்படியானால் நீங்கள் படித்தவற்றை உங்கள் பெற்றோரிடமோ அல்லது சகோதர, சகோதரிகளிடமோ விளக்குங்கள். இது தெளிவாகப் புரிந்துகொண்டு படிக்கக் கைகொடுக்கும். புரிந்த விஷயங்களை மனப்பாடம் செய்யத் தேவை இல்லை. ஆகையால் படித்தவை மனதில் நிற்குமா என்ற பயமும் பறந்துபோகும். 

உணவில் கவனம்
பொதுவாகத் தேர்வு என்றாலே பதைபதைப்பு அதிகரிக்கும். அதிலும் பொதுத் தேர்வு என்றதும் மன அழுத்தம் அதிகரிக்கும். விளைவு அதிகப்படியாகச் சாப்பிடுதல், உறக்கமின்மை போன்ற பிரச்சினைகள் வரக்கூடும். இந்தச் சூழலில் உங்கள் உணவுப் பட்டியலைத் திட்டமிடுவது முக்கியம். எண்ணெய்ப் பண்டங்களைத் தவிர்த்துவிட்டுப் பழங்கள், காய்கறிகள், வைட்டமின், புரதச் சத்து மிக்க உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது.
சோர்வாக உணரும் சமயங்களில் கொய்யா, வாழை, ஆரஞ்சு போன்ற பழங்களைச் சாப்பிட்டால் பசிக்கு ருசியான தீனியும், உடலுக்கு ஊட்டச்சத்தும் கிடைக்கும். சோம்பலையும் தவிர்க்க இது உதவும். படிக்கும் நேரத்தில் தூக்கத்தைத் தவிர்க்க, காபி, தேநீர் அருந்தும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. அதற்குப் பதிலாக மோர், இளநீர், சத்து மாவுக் கஞ்சி அருந்தலாம். மூளை சுறுசுறுப்பாக வேலைபார்க்க ஆக்ஸிஜன் அவசியம். அதற்கு அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். 

தேர்வு நாளுக்குத் திட்டமிடல்
தேர்வு எழுதப் புறப்படும்போது நிதானமான மனோநிலையில் இருப்பது அவசியம். அதற்கு என்ன தேவை? கடைசி நேரத் தயாரிப்பை முதலில் தவிர்க்க வேண்டும். தேர்வுக்குத் தேவையான உபகரணங்களை அவ்வப்போது நினைவுபடுத்திக்கொண்டு எடுத்து வைப்பதற்குப் பதிலாக முன்கூட்டியே ஒரு சரிபார்ப்புப் பட்டியலை (Check list) தயார் செய்யுங்கள். இரண்டுக்கும் மேற்பட்ட பேனாக்கள், பென்சில், ரப்பர், ஸ்கேல், ஷார்ப்னர், கைக்கடிகாரம், தேர்வு நுழைவுச்சீட்டு, குடிநீர் பாட்டில் ஆகியவை இருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். தேர்வு நடக்கவிருக்கும் மையத்துக்குச் செல்லும் வழியை, பயணிக்க வேண்டிய நேரத்தை தூரத்தை முன்கூட்டியே சரிபார்த்துவிடுங்கள். 

தேர்வு தினத்தன்று
தேர்வு அறையில் தேர்வு தொடங்குவதற்கு முன்பாகக் கேள்வித்தாளை விநியோகித்து 15 நிமிடங்கள் அளிப்பார்கள் இல்லையா! அப்போது கேள்விகள் அனைத்தையும் கவனமாகப் படியுங்கள்.
கேள்வித் தாளில் இடம் பெற்றிருக்கும் வரிசையில்தான் பதிலளிக்க வேண்டும் என்றில்லை. நன்றாக பதில் தெரிந்த கேள்விகளை முதலில் தேர்ந்தெடுப்பது சிறந்தது. இப்படி எழுதும்போது ஓரிரு முறை நீங்கள் சரிபார்க்க வேண்டியது கேள்வியின் எண்ணைச் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறோமா என்பதுதான்.
நேர நெருக்கடி ஏற்பட்டால் பதில்களைப் பத்திகளாக எழுதுவதற்குப் பதிலாக ஒரு வரிப் புள்ளிகளாக மளமளவென எழுதிவிடுங்கள். இதன் மூலம் கேள்விகளைத் தவறவிடாமல் இருக்கலாம். விளக்க வரைபடங்களுக்கு விவரத் துணுக்குகள் எழுத மறவாதீர்கள்.
எதுவாக இருப்பினும் ஒன்றை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

 தேர்வில் உச்சபட்ச மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற முனைப்பு இருப்பது சரிதான். இருந்தாலும் மதிப்பெண்களைவிட வாழ்க்கை பெரியது! 

http://tamil.thehindu.com/general/education/
 

செவ்வாய், 1 மார்ச், 2016

Annai Ayesa Arts & Science College for Women


இந்த நல்ல முயற்சியில் எங்களது பங்களிப்பும் உள்ளது என்பதில் பெருமை கொள்கிறோம் . (அல்ஹம்துலில்லாஹ்)

ஒரு பந்து... சில இறகுகள்... இப்போது நம்புகிறாயா உலகமே?

ன்றைக்கு வியந்துபார்க்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது அறிவியல் உலகம். நாள்தோறும் புதுப்புது கண்டுபிடிப்புகள் பூமியில் பிரசவிக்கின்றன. ஆனால் இன்றோடு ஒப்பிடுகையில், ஆரம்பகாலங்களில் அறிவியல் அறிஞர்களும், விஞ்ஞானிகளும் அளித்த அறிவியல் பங்களிப்புகள் மகத்தானது.

தங்களது கருத்தை வெளியிட்டால், கழுத்தை நெறிக்கும் மதநம்பிக்கைகள், மதவாதிகள் நிறைந்த சமூகம், புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத சமூகத்தில் விதிக்கப்படும் மரணதண்டனைகள், கசையடிகள்  என எத்தனையோ பேர், தடைகளைத் தகர்த்து அறிவியல் உலகிற்கு தங்கள் வாழ்வை தியாகம் செய்திருக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர் இத்தாலியை சேர்ந்த விஞ்ஞானி கலிலியோ கலிலி. மதநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை கூறுவதற்கு தண்டனை விதிக்கப்பட்டு, காலம் முழுக்க துயருற்ற மாபெரும் சகாப்தம் கலிலியோ. அவருக்கு முன்பு கூறப்பட்டிருந்த எத்தனையோ பொய்யான கோட்பாடுகளை, தகுந்த ஆதாரங்கள் மூலம் தவிடுபொடியாக்கியவர். அப்படி அவர் 15-ம் நூற்றாண்டில் பொய் எனக்கூறிய முக்கியமான கோட்பாடு, பொருட்களின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசை பற்றியது. இதனைப் பற்றிய தெளிவான விளக்கம் அளித்தாலும்,  அதனை துல்லியமாக நிரூபிக்க, போதுமான வசதிகள் அன்று இல்லை. மிக எளிமையான கோட்பாடு இது. அதைத்தான் தற்போது நவீன சோதனைகள் மூலம் உண்மை என நிரூபித்திருக்கின்றனர். அது என்ன?




அரிஸ்டாட்டில் VS கலிலியோ

அறிஞர் அரிஸ்டாட்டில் அளித்திருந்த விளக்கங்கள் எல்லாம் 15-ம் நூற்றாண்டில் புனிதநூல் போன்றவை. எந்தவித கேள்விகளும் இன்றி அரிஸ்டாட்டிலின் கோட்பாடுகளை அப்படியே நம்பிக்கொண்டிருந்தனர் மக்கள். அதில் பலவற்றை தகுந்த ஆதாரங்களுடன் பொய் என நிரூபித்தார் கலிலியோ. பொருட்களின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசை பற்றிய அரிஸ்டாட்டிலின் விளக்கம், “இரண்டு பொருட்களை சம தூரத்தில் இருந்து கீழே போட்டால், எடை அதிகமான பொருளானது முதலில் தரையை வந்தடையும்” என இருந்தது. இதை மறுத்தார் கலிலியோ. “இருவேறு எடை கொண்ட பொருட்களை சமதூரத்தில் இருந்து கீழே போட்டால், இரண்டு பொருட்களுமே ஒரே நேரத்தில்தான் தரையை வந்தடையும். அதன் மீது செயல்படும் முடுக்கம் (acceleration) ஒரே மாதிரிதான் இருக்கும்” என விளக்கம் அளித்தார் கலிலியோ. இதனை விளக்கத்தோடு நிறுத்தாமல் பைசா நகரின் சாய்ந்த கோபுரம் மீது ஏறி நின்று சோதித்து 1589-ம் ஆண்டு நிரூபித்தார். பைசா கோபுரம் மீது நின்றுகொண்டு, இரண்டு சமமற்ற எடைகளைக்கொண்ட இரும்பு குண்டுகளை கீழே போட்டார். இரண்டுமே ஒரே நேரத்தில் தரையை வந்தடைந்தது.  அரிஸ்டாட்டில் கூற்று தவறு என இத்தாலி மாணவர்களுக்கு புரியவைத்தார் கலிலியோ.

அதே சமயம் ஒரு இறகையும், இரும்பு குண்டையும் சம உயரத்தில் இருந்து கீழே போட்டால், இதே முடிவு கிடைக்குமா? கிடைக்காது. ஏனெனில், இரண்டின் அடர்த்தியும் வேறுபட்டது. அவை மேலே இருந்து கீழே விழுகையில் அவற்றை தடுக்கும் காற்று மற்றும் காற்றில் ஏற்படும் உராய்வு ஆகியவை பொருளின் வேகத்தை தடுத்து விடுகிறது. இதனால் இரும்பு எளிதாக காற்றை தள்ளி, வேகமாக தரைக்கு வந்துவிடும். இறகு மெதுவாக காற்றில் தவழ்ந்து வந்துவிழும். புவியீர்ப்பு விசையானது இரும்பு குண்டு மற்றும் இறகு ஆகிய இரண்டிலும் செயல்படுத்தும் விசையானது ஒன்றுதான். ஆனால் காற்று அதன் மேல் ஏற்படுத்தும் தடை இரண்டையும் வேறுவேறு விசையில் இயக்குகிறது. அந்த காற்று இல்லாத, வெற்றிடத்தில் இதே சோதனையை செய்தால் முடிவு நிச்சயம் கலிலியோ சொன்னது போல்தான் இருக்கும். இதனை கலிலியோ விளக்கினாலும், அப்போது இருந்த  தொழில்நுட்பம் கொண்டு கலிலியோவால் இதனை நிரூபிக்க முடியவில்லை. அதனை  தற்போது பிரம்மாண்டமாக செய்து காட்டியிருக்கிறார் பிரையன் கோக்ஸ்.

 

எப்படி சாத்தியமானது இது?

பிபிசி- 2 தொலைக்காட்சியின் புகழ்பெற்ற அறிவியல் தொடர் ‘Human Univers’.   இதனை வழங்குபவர் இயற்பியல் பேராசிரியரான பிரையன் கோக்ஸ். ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு இயற்பியல் தலைப்பை பிடித்து அதனை சோதனைகள் மூலம் விளக்குவது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. அப்படி கையில் எடுத்ததுதான் கலிலியோவின் புவியீர்ப்பு விசைக்கோட்பாடு. இதற்காக அவர் தேர்ந்தெடுத்த இடம் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் நாசாவின் ஆராய்ச்சிக்கூடம். 1969 ல் கட்டப்பட்ட இந்த ஆய்வுக்கூடம், அணு ஆயுத தொழில்நுட்பங்களை சோதனை செய்ய உருவாக்கப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் பெற்றவுடன், தற்போது விண்கலன்களை சோதனை செய்யும் கூடமாகவும், விண்வெளி வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் இடமாகவும் இருந்து வருகிறது.

முதலில் இந்த சோதனையை நடத்த, ஒரு பந்தும், சில இறகுகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டும் ஒரே நேரத்தில் கீழே விழுமாறு உயரமான கம்பியில் கட்டப்பட்டது. ஆய்வுக்கூடத்தில் முதலில் காற்று இருக்கும்போதே சோதனை நடத்தப்பட்டு, இரண்டும் உயரத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்றன. வழக்கம்போல பந்து முதலிலும், இறகுகள் மெதுவாகவும் தரையை வந்தடைகிறது. பின்னர், ஆய்வுக்கூடம் மூடப்பட்டு, உள்ளே இருக்கும் 8 லட்சம் கனஅடி காற்று 3 மணி நேரத்தில் வெளியேற்றப்படுகிறது. தற்போது ஆய்வுக்கூடம் முழுக்க, காற்று வெளியேற்றப்பட்டு முழு வெற்றிடமாக இருக்கிறது. பந்தும், இறகும் சோதனைக்கு தயாராக இருக்கிறது. இவற்றை படம் பிடிக்க, கேமராக்கள் ஆன் செய்யப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட, நொடியில் துல்லியமாக இரண்டு பொருட்களும் விடுவிக்கப்பட, இரண்டும் தரையை வந்தடைகிறது. எந்தவித தூர வேறுபாடும் இல்லாமல், ஒரே நேரத்தில் இரண்டும் தரையைத்தொடுகின்றன. கலிலியோ சொன்ன புவியீர்ப்பு விசை தொடர்பான கூற்றை அடிப்படையாக வைத்து உருவானதுதான் ஐசக் நியூட்டனின் புவியியல் கோட்பாடுகள். நியூட்டனும் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டவர்தான். இறுதியில் 4 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் கலிலியோவின் விளக்கம் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
எல்லாப்பொருளின் மீதும், புவியீர்ப்பு விசை ஒரே அளவில்தான் இருக்கும். காற்று இல்லாத வெற்றிடத்தில், பொருளின் மீது, புவியீர்ப்பு விசை தவிர வேறு எதுவும் செயல்படாது என்பது இதன் முடிவு. ஐன்ஸ்டீன் வரையறுத்த, ஈர்ப்பு அலைகள் என்னும் ‘Gravitational Waves’ சமீபத்தில்தான் விஞ்ஞான உலகில் வியப்பை ஏற்படுத்தியது. பெருவெடிப்பு, கருந்துளைகள் பற்றிய ஹாக்கிங் கோட்பாடு என நிறைய தீர்க்கப்படாத கோட்பாடுகள் நிறைய இருக்கின்றன. அவற்றின் முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு, இன்னும் அறிவியல் நமக்கு ஆச்சர்யங்களை பரிசளிக்கலாம்.

- ஞா.சுதாகர்
http://www.vikatan.com/news/world/59867-brian-cox-visits-worlds-biggest-vacuum-chamber.art

திங்கள், 29 பிப்ரவரி, 2016

அன்னை ஆயிஷா கலை அறிவியல் மகளிர் கல்லூரி -- லெப்பைக்குடிகாடு

















LBK சங்கம் பெரம்பலூர் மாவட்டம்
வாலிகண்டபுரத்தில் நிறுவியுள்ள
அன்னை ஆயிஷா கலை அறிவியல் மகளிர் கல்லூரி
-- லெப்பைக்குடிகாடு
இஸ்லாமியப் பாடத்தையும் உலகியல் பாடத்தையும்
ஒருசேர கற்ற ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்களை
தமிழக முஸ்லிம் உம்மத்தில் உருவாக்க வேண்டும் என்ற
இலக்கோடு உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது பெண்கள் கல்லூரி
நேற்று துவக்க விழா நடைபெற்றது
இந்த செய்தியை பார்க்கின்ற கேட்கின்ற சகோதரர்கள்
ஒரு நிமிடம் ஒதுக்கி உள்ளன்போடு கையேந்தி இதன்
வெற்றிக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்

 

 

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

TNPSC ENGINEERING RECRUITMENT 2016

TNPSC ENGINEERING RECRUITMENT 2016 |  பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு...விண்ணப்பிக்க கடைசி தேதி  18.3.2016 ....விரிவான விவரங்கள்...

tnpsc

புதன், 24 பிப்ரவரி, 2016

சுய முன்னேற்றம்: உயர்த்திக்கொள்ள 10 வழிகள்

தொழில் உலகில் ஊக்கத்தோடு செயல்படும் பலர் இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டு, சலித்துக்கொண்டு, சோர்வாக ஏனோதானோவென வேலைபார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நீங்கள் இதில் எந்தத் தர்ப்பை சேர்ந்தவர் என்பதைத் தீர்மானிப்பது எது? சுற்றமும் சூழலும் வளர்ச்சியை நிர்ணயிக்கும் உந்துசக்தியாகப் பெருமளவில் விளங்கினாலும் நம்முடைய மனோநிலைக்கும் அணுகுமுறைக்கும் முக்கிய இடம் உண்டு. 

அதற்கு மிகச் சிறந்த உதாரணம், தேர்தலில் பல முறை தோல்வியைத் தழுவிய ஒருவர் விடாமுயற்சியோடு போட்டியிட்டு அமெரிக்க அதிபராக வெற்றிவாகை சூடினார். தான் வளர்த்தெடுத்த நிறுவனத்திலிருந்தே துரத்தப்பட்ட ஒருவர் பின்னாளில் பிரபலக் கணினி ஜாம்பவானாக மாறினார். அவர்கள் யார் யார் என்று தெரிகிறதா? இப்படித் தன்னைத்தானே மெருகேற்றிக்கொள்ளவும் தொழில்ரீதியாகச் சிறந்து விளங்கவும் தேவையான 10 அணுகுமுறைகளை ஸ்பெயினில் இருக்கும் நவரா பல்கலைக்கழக விரிவுரையாளரும் ஆலோசகருமான பாப்லோ மேல்லா பட்டியலிடுகிறார். 

நிதர்சனங்களைப் புரிந்து கொள்தல் 
 
உங்களையும் மற்றவர்களையும் குறித்த நிதர்சனமான பார்வையும் புரிதலும் வளர்த்துக் கொள்ளும்போதுதான் சுய முன்னேற்றம் சாத்தியமாகும். அதிலும் நம்முடன் இணைந்து பணியாற்றுபவர்களிடம் எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது. நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பதை விடுத்துச் சூழ்நிலையை யதார்த்தமாகப் புரிந்துகொண்டு கையாள்வதே புத்திசாலித்தனம். 

பலமும் பலவீனமும் 

தப்பித்தவறிகூடத் தவறு நிகழ்ந்துவிடக் கூடாது என நமக்கு நாமே கடிவாளம் போட்டுக்கொள்வதும் சிக்கல்தான். நம்முடைய குறைகளை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். பலவீனங்களை ஒத்துக்கொண்டால் மட்டுமே முன்னேற்றம் சாத்தியம். இல்லையேல் தோல்வியால் மனம் உடைந்துபோகும். பலவீனங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராகாதவர்களுக்குத் தாழ்வுமனப்பான்மை அதிகரிக்கும். ஆக, வெற்றியைக் கொண்டாடுவோம்; தோல்வியை நிதானமாக ஏற்றுக்கொள்வோம். 

குற்றம் பார்க்கலாமா? 
 
நீங்கள் சங்கிலி துரித உணவகங்களைப் பல்வேறு இடங்களில் நடத்துபவர் எனக் கற்பனை செய்துகொள்ளுங்கள். திடீரென ஒரு உணவகத்துக்கு வந்திறங்கிய இறைச்சி கெட்டுப்போனதாகத் தெரியவருகிறது. வாடிக்கையாளர் நலன் கருதி அந்த உணவை அப்புறப்படுத்தியபோதும் இந்தச் செய்தி பரவிவிடுகிறது. இதில் உங்களுடைய தவறென்று எதுவும் இல்லை. இந்தச் சூழலில் ஹோட்டல் நிறுவனராகப் பொறுப்பேற்றிருக்கும் நீங்கள் நடந்ததை எண்ணிச் சோர்ந்துபோகலாம். யாரால் இது நடந்ததோ அவரைக் கடிந்துகொண்டு தண்டிக்கலாம். ஆனால் இதனால் தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர நிதானமாகச் சிந்தித்துச் செயல்படுவதுதான் நல்லது. 

மகிழ்ச்சியும் நன்றியும்
 
நெடுங்காலமாகக் காத்திருந்த வாய்ப்பு கிடைக்கும்போது உடனடியாக மகிழ்ச்சி அடைவோம். சில காலம் முழுமூச்சாக ஈடுபாட்டோடு செயல்படுவோம். ஆனால் காலப்போக்கில் உத்வேகம் குறைந்து அதன் அருமை மறந்துபோகும். இந்த வேலை கிடைத்திடாதா என ஏங்கிய காலம் மாறி இது சரி இல்லை, அதில் குறை எனச் சலிப்பூட்டும். இதனால் நம்முடைய மனச்சோர்வுக்கு நாமே காரணமாகிறோம் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். 

நேர்மறைச் சிந்தனை 
 
எதிர்மறையான சிந்தனை கொண்டவர்களைக் காட்டிலும் நேர்மறையான விற்பனையாளர்களால் 90 சதவீதம் கூடுதலாகத் தங்கள் பொருட்களை விற்க முடிந்தது என்கிறது சமீபத்திய ஆய்வு. அது எப்படிச் சாத்தியம் எனக் கேட்கலாம். உதாரணமாக, நண்பர்கள் சந்திப்புக்குச் செல்லும்போது எப்படியும் அந்தக் கூட்டம் அறுவையாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தோடு சென்றீர்களானால் நிச்சயமாக உங்களால் கொண்டாட்ட மனநிலைக்கு எளிதில் வர முடியாது. அதே எளிமையான உளவியல்தான் இதன் அடிப்படையும். 

எட்டக்கூடிய இலக்கு 
 
நம்மால் எட்ட முடிந்த இலக்கை நிர்ணயிக்கும்போது அதற்கான உத்வேகம் தானாகவே பிறக்கும். ஒவ்வொரு கட்டத்திலும் நீங்கள் அடைய வேண்டிய உயரத்தின் யதார்த்தமான சாத்தியக்கூறுகளைக் கணக்கிட்டுத் திட்டமிடுங்கள்; வெல்லுங்கள்! 

அர்த்தமுள்ள செயல்பாடு 
 
ஒருவர் அலுவலக வேலைக்குச் செல்வதும் மற்றொருவர் சமூகச் செயற்பாட்டாளராக இயங்குவதும் ஒன்றாகிவிட முடியாது. சிலருக்கு மட்டுமே வேலை என்பது வாழ்க்கையின் அர்த்தமாகவே மாறிப்போகும். மற்றவர்கள் அதைக் கண்டுபிடிக்க வேண்டும். 

முன்வர வேண்டும் 

கொடுத்த வேலையை மட்டுமே செய்வதற்கும் முக்கியத் தீர்மானங்களைத் தானே முன்வந்து எடுப்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்போது தானாகவே உத்வேகம் அதிகரிக்கும். 

நம்பிக்கையும் கடமையும் 
 
நமக்குப் பிடித்ததை மட்டுமே செய்துவிட்டாலே உற்சாகம் பீறிட்டு எழும் எனச் சொல்லிவிட முடியாது. பிடித்த விஷயத்தை முழு ஈடுபாட்டோடு செய்யும்போது மட்டுமே அது சாத்தியம். ஈடுபாடு தளர்ந்துபோகும் வேளையில் உங்களுடைய கடமைகளை அசைபோடுங்கள் அது உங்களை வழிநடத்தும். 

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி 
 
தடைகளை எதிர்கொள்ளும்போது தளர்ந்துபோவது சகஜம்தான். ஆனால் விழும்போது நம்மை நாமே எழுப்பிக்கொள்ளும் மனோதைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் போட்ட புதிருக்கு விடை இதோ. விடாமுயற்சி மட்டும் இல்லாதிருந்தால் பல முறை தோற்ற ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக நிமிர்ந்து எழுந்திருக்க முடியாது. தான் வளர்த்த நிறுவனம் கைவிட்டதே எனத் துவண்டிருந்தால் ஸ்டீவ் ஜாப்ஸ் உலகப் புகழ் பெற்ற கணினி ஜாம்பவானாக முன்னேறியிருக்க முடியாது. 

தமிழில்: ம.சுசித்ரா
நன்றி: © ‘தி இந்து’ எம்பவர் (ஆங்கிலம்)

மத்திய அரசுப் பணிகளில் சேர வேண்டுமா?

 




மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் சார்நிலைப் பணிகளில் (குரூப்-பி, குரூப்-சி) உள்ள காலியிடங்கள் பணியாளர் தேர் வாணையம் (Staff Selection Commission-SSC) மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (Combined Graduate Level Examination) நடத்தப்படுகிறது. இதில் முதல்நிலை, இரண்டாம் நிலை என இரு நிலைகள் உண்டு. 

முதல் நிலையில் இதர அரசு போட்டித்தேர்வுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் பொது அறிவு, ரீசனிங், அடிப்படை கணிதம், பொது ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளிலிருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் நிலையில், கணிதம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து கேள்விகள் இடம்பெறும். கடந்த ஆண்டு வரையில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வில் நேர்முகத்தேர்வு இருந்தது. குரூப்-பி, குரூப்-சி பணிகளுக்கு நேர்முகத்தேர்வு ரத்துசெய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பதால் இந்த ஆண்டிலிருந்து நேர்முகத்தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டாலே மத்திய அரசு பணி உறுதி. 

ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வெழுத ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப் படிப்பு முடித்திருந்தால் போதும். வயது வரம்பைப் பொருத்தவரையில் பணிகளுக்கு தக்கவாறு அதிகபட்சம் 27, 30, 32 என்று வெவ்வேறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மத்திய அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. 

இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் உதவியாளர், உதவி பிரிவு அதிகாரி (ஏஎஸ்ஓ), வருமான வரி ஆய்வாளர், மத்திய கலால் ஆய்வாளர், தடுப்பு ஆய்வாளர், தேர்வு ஆய்வாளர், உதவி அமலாக்க அதிகாரி, சிபிஐ சப்-இன்ஸ்பெக்டர், தபால்துறை ஆய்வாளர், கணக்கர், புள்ளியியல் ஆய்வாளர், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆய்வாளர், தேசிய புலனாய்வு முகமை உதவி ஆய்வாளர், உதவி தணிக்கை அதிகாரி மற்றும் குரூப்-சி நிலையில் ஆடிட்டர், கணக்கர், முதுநிலை உதவியாளர், வரி உதவியாளர், போதைப்போருள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் என பல்வேறு விதமான பணியிடங்களை நிரப்புவதற்காக பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

காலியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை என்றாலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இந்த தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்நிலை தேர்வு (Tier-I) மே மாதம் 8 மற்றும் 22-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கு மார்ச் மாதம் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில் (http://sscregistration.nic.in) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுமுறை, ஒவ்வொரு பாடத்துக்கான மதிப்பெண் விவரம், தேர்வுக்கான பாடத்திட்டம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்களை பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.ssc.nic.in) விரிவாக தெரிந்துகொள்ளலாம். 

பொதுவாக, பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு குறித்த விழிப்புணர்வு தமிழக மாணவர்களிடம் மிகவும் குறைவாக உள்ளது. ஒவ்வோரு ஆண்டும் தமிழகத்திலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்வுக்கு விண்ணப்பிக்கிறார்கள். தற்போது பல்வேறு பதவிகளுக்கு ஆயிரக்கணக்கான காலியிடங்கள் நிரப்பப்படுவதாலும், முதல் முறையாக நேர்முகத்தேர்வு ரத்துசெய்யப்பட்டிருப்பதாலும் தமிழக மாணவர்கள் எளிதாக மத்திய அரசுப் பணியில் சேர இது ஓர் அரிய வாய்ப்பு.


http://tamil.thehindu.com/general/education