Marque - Heading

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) "கற்பவராக இரு அல்லது கற்பிப்பவராக இரு அல்லது கற்பவருக்கும் , கற்பிப்பவருக்கும் உதவியாளனாக இரு"

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

நெட்- தேர்வு

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான டிசம்பர் மாத -நெட்- தேர்வு முடிவு வெளியீடு: ஜூன் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மூலம் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட "நெட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும் ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது.

இப்போது 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கானத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வானது ஜூலை 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு www.cbsenet.nic.in என்ற இணையதளம் மூலம் செவ்வாய்க்கிழமை (ஏப்.12) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மே 12 கடைசித் தேதியாகும். தேர்வுக் கட்டணத்தை மே 13-ஆம் தேதி வரை செலுத்த முடியும்.

நன்றி:தினமணி-கல்வி 12 April 2016 03:30 AM
http://www.dinamani.com/…/%E0%AE%9F%E0%A…/article3376124.ece

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக