சென்னை: தொலைநிலைக் கல்வியில் பி.எட். படிக்க விரும்புவோருக்காக
மாணவர் சேர்க்கையை அறிக்கையை கோவை பாரதியார் பல்கலைக்கழகம்
வெளியிட்டுள்ளது.
இப்படிப்பில் சேர இளநிலை அல்லது முதுநிலையில் (தமிழ், ஆங்கிலம், வரலாறு,
புவியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணினி)
போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு
அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது ஆசிரியராக
பணியில் இருக்க வேண்டும்.

பொருளாதாரம் மற்றும் வணிகவியல் போன்ற துறையில் முதுநிலை பட்டப்
படிப்பு படிக்கும் மாணவர்கள், இளநிலையிலும் அதே துறை பிரிவில் பட்டம்
பெற்றிருப்பது அவசியம். அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில், ஆசிரியர் கல்வி
படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் படிப்பில் சேர விண்ணப்பம் செய்வதற்கு மார்ச் 31 கடைசி நாளாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக