சென்னை: டெல்லி ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் எம்பிஏ படிப்பு
சேர்வதற்கு அருமையான வாய்ப்புக் கிடைத்துள்ளது.
எம்பிஏ பொதுப் பிரிவில் படிக்க முடியும். இது இரண்டு ஆண்டு படிப்பாகும்.
மேலும் டெலிகாம் துறையில் எம்பிஏ படிப்புகளையும் ஐஐடி அறிமுகம்
செய்யவுள்ளது. 2016-ம் ஆண்டில் இந்த படிப்புகல் தொடங்கும்.

எம்பிஏ பொதுப் படிப்பில் சேர விரும்புபவர்கள் பட்டப்படிப்பை
முடித்திருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி
பெற்றிருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்
பெற்றிருந்தாலே போதுமானது. மேலும் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இந்த
படிப்பை முடித்திருக்கவேண்டும்.
எம்பிஏ டெலிகாம் படிப்பு படிக்க விரும்புபவர்கள் பொறியியல், டெக்னாலஜி,
ஆர்க்கிடெக்சர், பார்மசி, பிஎஸ்சி அக்ரிகல்ச்சுரல் என்ஜினியரிங் பிரிவில்
பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் பிஎஸ்சி இயற்பியல்,
வேதியல், கணித பட்டப் படிப்புகளில் ஒன்றை முடித்திருக்கவேண்டும்.
புள்ளியியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், எலக்ட்ரானிக் சயின்ஸ்,
என்விரான்மென்டல் சயின்ஸ், ஆப்பரேஷன் ரிசர்ச், கம்ப்யூட்டேஷ
னல்/இன்பர்மேஷன் சயின்ஸ் பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்கவேண்டும்.
இந்த படிப்பை படிக்க படிக்க விரும்புவோர் ஐஐடி டெல்லி இணையதளத்தைத்
தொடர்புகொணன்டு ஆன்-லைனில் விண்ணப்பிக்கவேண்டும். சிஏடி தேர்வு
அடிப்படையில் தேர்வு இருக்கும். சிஏடி தேர்வு முடிவுகள் 2016 ஜனவரி 2-வது
வாரத்தில் வெளியாகும்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகத் தேர்வு மார்ச் 10-ம் தேதி இருக்கும்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் 2015 மே மாதம் வெளியாகும். வகுப்புகள்
2016 ஜூலை 25-ம் தேதி தொடங்கும்.
http://www.iitd.ac.in/
http://tamil.careerindia.com/news/iit-delhi-offers-admissions-mba-programmes-000757.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக