Marque - Heading

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) "கற்பவராக இரு அல்லது கற்பிப்பவராக இரு அல்லது கற்பவருக்கும் , கற்பிப்பவருக்கும் உதவியாளனாக இரு"

சனி, 28 நவம்பர், 2015

NMMS Examination - 2016

NMMS Examination - 2016 | NMMS தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பள்ளி தலைமை ஆசிரியரிடம், டிசம்பர் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டம் கீழ், உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதை பெறுவதற்கு, தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய, அனைத்து வட்டார அளவில், தேர்வு மையம் அமைக்கப்பட்டு, ஜன., 23ல், தேர்வு நடக்க உள்ளது. தேர்வுக்கான விண்ணப்பம், நாளை, www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது; டிச., 11ம் தேதி வரை, பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பள்ளி தலைமை ஆசிரியரிடம், டிச., 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு மற்றும் Application Form Download செய்வதற்கு
 
 http://www.tndge.in/DOCS/NMMS-2015-APPLICATION-FORMAT&%20INSTRUCTIONS.pdf



 

ஞாயிறு, 22 நவம்பர், 2015

ஐஐடி வழிகாட்டி- 2: பி.டெக்.கில் எந்தப் பிரிவை தேர்ந்தெடுக்கலாம்?














ப்ளஸ் 2 முடித்தவர்கள் ஐ.ஐ.டி.யில் சேர்வதற்கு வசதியாக அங்கு என்னென்ன கல்விப் பிரிவுகள் உள்ளன என்பதை முதலில் அறிந்து கொள்வோம். ஐ.ஐ.டி.யின் மிகப் பரவலான பட்டப் படிப்பு பி.டெக். (B.Tech.). இதில், என்னென்ன பிரிவுகளை தேர்ந்தெடுக்கலாம் என்பதையும் பார்த்துவிடுவோம்.
1. விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering), 2. வேதி யியல் பொறியியல் (Chemical Engineering), 3. குடிமுறைப் பொறியியல் (Civil Engineering), 4. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (Computer Science & Engineering), 5. மின் பொறியியல் (Electronic Engineering), 6. பொறி யியல் சார்ந்த இயற்பியல் (Engineering Physics), 7. இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering), 8. உலோகம் மற்றும் பொருள் பொறி யியல் (Metallurgical & Material Engineering), 9. கப்பல் கட்டு மானம் மற்றும் கடல் சார்ந்த பொறியியல் (Naval Architecture & Ocean Engineering). இவை பெரும்பாலான ஐ.ஐ.டி.க்களில் உள்ளன. 

இவை தவிர வேறு சில பிரிவுகளும்கூட சில ஐ.ஐ.டி.க்களில் உண்டு.
பி.டெக்.கில் சேர நீங்கள் 3 கட்டங்களைக் கடக்க வேண்டும். முதல் கட்டம் உங்கள் ப்ளஸ் 2 மதிப்பெண்கள்.  

இரண்டாவது JEE (Mains) தேர்வு. இவை இரண்டையும் வெற்றிகரமாக முடித்தால், JEE (Advanced) தேர்வுக்கு அழைக்கப்படுவீர்கள்.
(இனி JEE (Mains) தேர்வை நாம் நுழைவுத் தேர்வு என்றும், JEE (Advanced) தேர்வை இறுதித் தேர்வு என்றும் குறிப்பிடலாம்). 

பி.டெக்.கில் பல பிரிவுகள் உள்ளதை பார்த்தோம். இறுதித் தேர்வை வெற்றிகரமாக முடித்த வுடன் உங்கள் விருப்பத்துக்கேற்ப இந்தப் பிரிவுகளை நீங்கள் பட்டி யலிட வேண்டும். அதாவது உங்கள் முதல் சாய்ஸ் என்ன பிரிவு, இரண்டாவது எந்தப் பிரிவு என்பது போல. 

இந்திய அளவில் (மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு) தரப் பட்டியல் ஒன்றை வெளியிடுவார்கள்.
அதில் முன்னணியில் இருப்ப வர்களுக்கு அவர்களது முதல் விருப்பப் பிரிவே அளிக்கப்படும். கீழே செல்லச் செல்ல அடுத்தடுத்த சாய்ஸ்கள் கிடைக்கும்.
மேற்படி நுழைவுத் தேர்வு பி.டெக். தேர்வுக்கு மட்டுமல்ல. ஐ.ஐ.டி. அளிக்கும் வேறு சில படிப்புகளுக்கும் சேர்த்துதான் (சொல்லப்போனால் ஐ.ஐ.டி. அல்லாத வேறு சில பொறியியல்-அறிவியல் கல்வி நிறுவனங்களும் கூட இதே நுழைவுத் தேர்வின் மதிப்பெண்களை அடிப்படை யாகக் கொண்டு அட்மிஷன் அளிக்கின்றன. அவற்றைப் பிறகு பார்ப்போம்). 
 
பி.டெக்.குக்கு பதிலாக ஐந்தாண்டு இரட்டைப் பட்டத்துக் கான கல்வியை நீங்கள் தேர்ந் தெடுக்கலாம். இதை Dual Degree என்பார்கள். இதற்கு அர்த்தம் நீங்கள் இரண்டு வெவ்வேறு கல்விப் பிரிவுகளை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்ப தில்லை. ஒரே கல்விப் பிரிவில் நீங்கள் பட்டப்படிப்பு, முதுகலைப் படிப்பு (B.Tech. & M.Tech.) ஆகிய இரண்டையும் இந்த ஐந்து வருடங்களில் படிக்கலாம் என்று அர்த்தம். 

B.S. மற்றும் M.S. (Bachelor of Science & Master of Science) ஆகிய இரண்டுக்கும் சேர்த்தும் Dual Degree வழங்கப்படுகிறது. இதற்கும் அதே நுழைவுத் தேர்வு. இதில் Science என்பதில் உள்ள பல்வேறு பிரிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். 

இயற்பியல், கணிதம், அறிவியல்முறைக் கணக் கிடுதல் (scientific computing), பொறியியல் சார்ந்த இயற்பியல் போன்றவை சில.
இதுபோல இரட்டைப் பட்டங்கள் கொண்ட படிப்பில் ஒரு வசதி உண்டு. முதுகலைப் படிப்பை ஐ.ஐ.டி.யில் பின்னர் எழுத தனியாக ஒரு நுழைவுத் தேர்வை எழுத வேண்டாம். என்றாலும் பலரும் பி.டெக்.கிற்கே முன்னுரிமை தருகிறார்கள். முது நிலைப்படிப்பை வெளிநாடுகளில் படிக்கலாமே என்ற எண்ணம் ஒரு காரணம். பி.டெக். முடித்தவுடன் வேலைக்குச் சேர்ந்துவிடலாமே என்பது மற்றொரு காரணம். 

உலகின் மிகக் கஷ்டமான பொறியியல் தேர்வுகளில் ஒன்று என்று கூறப்படுகிறது ஐ.ஐ.டி.நுழைவுத் தேர்வு. 

“ஐயோ அப்படியா?’’ என்று பின்வாங்கத் தோன்றுகிறதா? நுழைவுத்தேர்வு எழுத யாராவது பயிற்சி கொடுப்பார்களா என்ற பரிதவிப்பு உண்டாகிறதா? மேற்படி கேள்விகளுக்கு நம்பிக்கை யையே பதிலாக தருகிறோம். இந்த நம்பிக்கை அடுத்தடுத்த இதழ்களில் உங்கள் இதழோரம் புன்னகையளிக்கும். 

இன்ஷாஅல்லாஹ் வழிகாட்டி தொடரும்

திங்கள், 16 நவம்பர், 2015

நமதூரில் ABACUS பயிற்சி


நமதூரில் ABACUS பயிற்சி 


ABACUS  - ஐ பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்க்கு , Free Assessment Class - க்கு தொடர்பு கொள்ளவும்.

M.சாதிக் பாஷா ,
9942525954,9171117943

ஞாயிறு, 15 நவம்பர், 2015

வி.ஏ.ஓ.தேர்வு மீண்டும் வருது.... தயாராகுங்க!!

சென்னை: கிராம நிர்வாக அதிகாரி(வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தற்போது அறிவித்துள்ளது. தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை எழுத ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 14-ஆம் தேதி கடைசி நாளாகும்.
 
விஏஓ பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம். விண்ணப்பிக்கும் நபருக்கு வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் நீங்கலாக இதர இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இந்தப் பணியிடங்களுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்படுகிறது. மொத்தம் 813 இடங்கள் காலியாக உள்ளன. தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறவுள்ளது. 
 
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.இந்த உத்தரவு விஏஓ பணிக்கும் பொருந்தும் என்பதால் மொத்த காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் எஸ்எஸ்எல்சி முடித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே இது குறித்து குறிப்பிட வேண்டும்.
 
 எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத் தேர்வில் பொது அறிவு, திறனறிவு, கிராம நிர்வாக நடைமுறைகள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 300.
 
 எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்ட விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றாலே பணி உறுதியாகிவிடும். 
 
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 14-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

குறிப்பு: இந்த நல்ல வாய்ப்பை பயன்டுத்தி நமதூரில் அதிகமான அரசு பணியாளர்களை உருவாக்குவோம். இன்ஷாஅல்லாஹ்.

சனி, 14 நவம்பர், 2015

ஐஐடி வழிகாட்டி- 1: அலிபாபா குகைக்குள் நுழைவோமா?



நீங்கள் ப்ளஸ் 2 மாணவரா? அல்லது அதற்கு முன்பாகவே மேல்படிப்பு குறித்து திட்டமிட்டு செயல்பட்டு வருபவரா? உங்களிடம் ஒரு கேள்வி.
எந்தக் கல்லூரியில் சேர முன் னுரிமை கொடுப்பதாக இருக்கி றீர்கள்? இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டெக்னாலஜி (சுருக்கமாக ஐ.ஐ.டி.) - இது ஓ.கேவா? கேள்வியைக் கேட்டதுமே ‘நடக்கிற காரியமா?’ என்று தோன்று கிறதா? 

உங்கள் பிரமிப்பு நியாயமானது தான். ஐ.ஐ.டி. பலவிதங்களில் ஸ்பெஷலானதுதான். அது பிறந்ததே ராஜமரியாதையோடுதான்.
‘ஏதோ ஐ.ஐ.டி. என்ற ஒன்றைத் தொடங்கினார்கள். அதில் சிலர் சேர்ந்தார்கள். படித்தார்கள். சிறப் பாக இருந்தது. ஐ.ஐ.டி.யின் புகழ் பரவியது’ என்பதுபோல் வளர்ந் தது அல்ல ஐ.ஐ.டி.யின் கவுரவம். 

வெகு சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துக் காகவே அது உருவானது. செதுக்கப்பட்டது. அரசால் அதற்குப் பலவித போஷாக்குகள் அளிக்கப்பட்டன. நிதி உதவி என்ற போஷாக்கு. ‘நாங்கள் தலை யிட மாட்டோம்’ என்ற உத்தர வாதம். வேறென்ன வேண்டும்? தொடக்கத்தில் வேறு சில நாடுகளின் ஸ்பெஷல் கவனிப்பு கூட ஐ.ஐ.டி.க்களுக்கு இருந்தது (சென்னை ஐ.ஐ.டி.க்கு - ஜெர்மனி). 

இன்று உலக அளவில் புகழ் பெற்றிருக்கும் இந்தியக் கல்வி நிறுவனங்களில், மிக முக்கிய மானதாக விளங்கும் ஐ.ஐ.டி.யின் தொடக்கம் சுவாரஸ்ய மானது. அது ஆங்கிலேயர் ஆண்ட காலம். 1946-ல் வைஸ்ராயால் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் நோக்கம் இதுதான். ‘‘உலகப்போர் முடிவுக்கு வந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் மிக உயர்ந்த தொழில்நுட்பக் கல்வியை அளிக்கும் வகையில் சில கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் உரு வாக்கப்பட வேண்டும்’’. குழுவில் 22 உறுப்பினர்கள். தலைமை ஏற்றது நளினிரஞ்சன் சர்கார் என்பவர். 

குழு கூடிக் கூடி பேசியது. ஐ.ஐ.டி. பிறந்தது.
முதல் ஐ.ஐ.டி. இயங்கத் தொடங்கியது மேற்கு வங்காளத் தில் உள்ள கரக்பூரில். மே, 1950-ல் இது உருவானது. என்றாலும் அதற்கு 6 வருடங்களுக்குப் பிறகுதான் இந்திய அரசு ஐ.ஐ.டி. சட்டத்தை நாடாளு மன்றத்தில் அறிமுகப்படுத்தியது. 

“இது தேசிய அளவில் முக்கியத் துவம் வாய்ந்த கல்வி நிறுவனம்’’ என்றது சட்டம். அதை உறுதிப் படுத்தும் வகையில் 1956-ல் ஐ.ஐ.டி.யில் ஏற்பாடு செய்யப் பட்டி ருந்த முதல் பட்டமளிப்பு விழா வில் கலந்துகொண்டவர் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு.
இந்தியாவின் முதல் ஐ.ஐ.டி.யின் முதல் பட்டமளிப்பு விழாவில், முதல் பிரதமர்! 

“இந்தியாவின் வருங்காலம் இங்கு உருவாக்கப்படுகிறது’’ என்றார் நேரு.
பிறகு அடுத்தடுத்து மும்பை, சென்னை, கான்பூர், டெல்லி ஆகிய நான்கு இடங்களில் ஐ.ஐ.டி.-க்கள் திறக்கப்பட்டன. 

ஐ.ஐ.டி.க்கள் ஆரம்பத்தி லேயே சிக்ஸர் அடித்தன. ‘‘எங்கள் மாநிலத்துக்கு ஐ.ஐ.டி. வேண்டும்’’ என்று அஸ்ஸாம் மாநில மாணவர்கள் போர்க் கொடி பிடித்தார்கள். அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அதை ஏற்றுக் கொண்டார். குவாஹாட்டியில் மேலும் ஒரு ஐ.ஐ.டி. தொடங்கப் பட்டது. 2001-ல் இந்தியாவின் மிகப் பழைய பொறியியல் கல்லூரியான ரூர்கி பல்கலைக்கழகத்துக்கு ஐ.ஐ.டி.க் கான அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
2003-ல் மேலும் சில ஐ.ஐ.டி.க் களை தொடங்க ஒப்புக் கொண்டார் பிரதமர் வாஜ்பாய். 16 மாநிலங்கள் தங்கள் எல்லைக்குள் ஐ.ஐ.டி. தொடங்கப்பட வேண்டும் என்று விண்ணப்பித்தன. இவற்றில் ஏழு கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்தது இதற்கான குழு. ஐ.ஐ.டி.க்கள் அளிக்கும் முக்கிய பட்டப் படிப்பு (அண்டர் கிராஜுவேஷன்) நான்கு வருட பி.டெக். (B.Tech.) எட்டு செமஸ்டர் கொண்டது இது. 

சரி இப்போது சொல்லுங்கள். ஐ.ஐ.டி.யில் சேர்ந்து பட்டப் படிப்பைத் தொடங்க ஓ.கேவா? 

‘‘தயாராகிவிட்டேன். நுழைவுத் தேர்வு எழுத என்ன தகுதிகள் தேவை?’’ என்று கேட்டால் அடுத் தடுத்த இதழ்களில் விடைகள் கிடைக்கும். ஆனால் உங்களில் கணிசமானவர்களுக்கு இன்னமும் தயக்கம் தொடர வாய்ப்பு உண்டு. என்ன, அதன் நுழைவுத் தேர்வு குறித்த பயம்தானே? 

‘‘நீங்கள் என்ன சொன்னாலும் நான் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக் குத் தயாராவதாக இல்லை’’ என்கிறீர்களா? அதுவும் நுழைவுத் தேர்வுக்குத் தகுதிகள் இருந்தும். இந்த குறுந்தொடரைப் படியுங் கள். மாற வாய்ப்பு உண்டு. உங்கள் வருங்கால நந்தவனத்தில் வாசப் பூக்கள் மலர்ந்து நிறைந்திருக்க ஓர் அருமையான வாய்ப்பு இது. ஒரு மிக நல்ல வாய்ப்யை அலட்சிய மாகத் தவறவிடும் ஒருவரை ஒரே வார்த்தையில் எப்படி விவரிப் பீர்கள்? அந்த வார்த்தையை உங்க ளைப் பார்த்து யாரும் சொல்லி விடக் கூடாது. படியுங்கள். நாளை யிலிருந்து தொடங்குகின்றன ஸ்வீட் தகவல்கள்.

நன்றி :
http://tamil.thehindu.com/general/education


குறிப்பு: IIT உருவாக மிக முக்கியமாக காரணமாக இருந்தவர் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மர்ஹும் , அபுல் கலாம் ஆசாத் அவர்கள்.

இன்ஷாஅல்லாஹ் வழிக்காட்டி தொடரும்.





புதன், 11 நவம்பர், 2015

தேசிய கல்வி நாள்

நவம்பர் 11: தேசிய கல்வி நாள் இன்று கொண்டாடப்படுகிறது
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மெளலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த நாள்தான் தேசிய கல்வி நாளாக கொண்டாடப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டு முதல், தான் மறையும் 1958ம் ஆண்டு வரை கல்வி அமைச்சராக பணிபுரிந்தார். சுதந்திரம் பெற்ற இந்தியாவின் கல்வித் தேவைகளை சரியான முறையில் நிறைவுசெய்ய உறுதிப்பூண்டு நடவடிக்கைகள் எடுத்தார். இந்திய தொழில்நுட்ப கழகத்தை(IIT) அமைத்ததும், பல்கலைக்கழக மானியக் குழு(UGC) என்ற அமைப்பிற்கு அடித்தளமிட்டதும் இவரது பெரும் சாதனைகளில் சில.


இவரது சாதனைகளை நினைவுகூர்ந்து, நன்றி தெரிவிக்கும் விதமாகத்தான், இவரது பிறந்த நாளான நவம்பர் 11ம் தேதி, தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

செவ்வாய், 10 நவம்பர், 2015

துபாயில் நடந்த IAS & IPS கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி துளிகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றோம்.
அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 07/11/2015 அன்று  IAS & IPS கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மில்லத் கல்வி அறக்கட்டளையால் நமதூர் மக்கள் 40 நபர்கள்  முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பேராசிரியர், முனைவர், ஜனாப்.சே.மு.மு. முகமது அலி அவர்களுக்கு நமது மில்லத் அறக்கட்டளையின் மூலம் சிறப்பு வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. 
அதை தொடர்ந்து பேராசிரியர் அவர்கள் நமது சமுதாய முன்னேற்றத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். 



 

நமதூரில் படித்தவர்களின் (படிப்பவர்களின்) எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வருகின்றது, ஆனால் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு என்று வரும் போது வெளிநாடுகளையே  நம்பி இருக்கின்றனர்.  தமிழ்நாட்டிலும் , இந்தியாவிலும் உள்ள அரசு சார்ந்த மற்றும் அரசு சார்ந்த தனியார் துறை வேலைவாய்ப்புகளில் நாம் கவனம் செலுத்துவது இல்லை.அதற்க்கான முறையான விழிப்புணர்வும்,வழிக்காட்டுதல்களும் இல்லை.

இன்ஷாஅல்லாஹ் நமது பிள்ளைகளை அரசு சார்ந்த உயர்ந்த துறைகளில் சேர நாம் ஊக்குவித்து அவர்களின் கரம் பிடித்து அழைத்து செல்வது அவசியம். மேலும் IAS - ஐ பற்றிய தேவையில்லாத கற்பனை பயத்தை விட்டு அல்லாஹ்வின் உதவியாலும் கடின உழைப்பாலும் எட்டிப்பறிக்க வேண்டும். இதன் மூலம் நமது சமுதயத்திற்கு மிகப்பெரிய மாற்றம் கிடைக்கும்.

இதற்காக சென்னை கோடம்பாக்கம் பள்ளிவாசலில் SIAS அகாடமி ஆரம்பம் செய்யப்பட்டு மாணவர்களை தயார் செய்து கொண்டு வருகின்றோம். லப்பைக்குடிகாட்டில் இருந்தும் மாணவர்கள் படித்து கொண்டு இருகின்றார்கள். இன்ஷாஅல்லாஹ் இதன் வெற்றிக்காக துஆ செய்யும் படியும் கேட்டு கொண்டார்.

S  - i am IAS  

http://s-ias.org/

 

 

 

 


60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்?

நம் மாணவர்கள் மத்தியில், எப்போதுமே இந்த சதவீதம்தான் அதிகம் எனலாம். ஆனாலும், முதல் ரேங்க், கோல்ட் மெடலிஸ்ட் இவர்களையெல்லாம்விட, 60% முதல் 80% வரை மதிப்பெண்கள் வாங்கியவர்கள், பிற்காலத்தில், வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது கண்கூடாக கண்ட உண்மை. காரணம், இவர்கள் பாடத்தைத் தாண்டி, கலை, விளையாட்டு என பிற விஷயங்களிலும் ஈடுபாடு உடையவர்களாக, முழுமையான பர்சனாலிட்டியாக இருப்பதுதான்.

+2 முடித்தவுடன் இவர்கள் என்ன மாதிரியான படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்று பார்க்கும்போது, எவர்கிரீன் படிப்புகளான மெடிக்கல், இன்ஜினியரிங் தாண்டி, ஏராளமான வித்தியாசமான தேர்வுகள் உள்ளன என்றாலும், பாப்புலரான இந்த இரண்டு வகைகளையும் நாம் போகிற போக்கில் விட்டுவிட முடியாது. எனவே, முதலில், இவை இரண்டையும் பார்த்துவிட்டு, பிறகு மற்றவற்றைப் பட்டியலிடுவோம்.

இன்ஜினியரிங் படிப்பைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள இடங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், விண்ணப்பித்த அனைவருக்குமே சீட் கொடுத்தும், மீதம் காலியாக இருக்கிறது என்பதுதான் உண்மை.எனவே, இன்ஜினியரிங் சீட் வாங்குவதைவிட, அப்படிப்பை வெற்றிகரமாக முடிப்பதுதான் இன்றைக்கு சிரமமான விஷயமாக இருக்கிறது. எனவே, இன்ஜினியரிங் படிப்பை சிறப்பாக வெற்றிகரமாக முடிக்கக்கூடிய சக்தி இருக்கிறதா என்பதை தெளிவாக ஆராய்ந்து, பிறகு முடிவெடுப்பது சிறப்பாக இருக்கும்.

மெடிக்கல் படிப்பை பொறுத்தவரை, தமிழகத்தில் குறைந்தளவு கல்லூரிகளே இருப்பதால், மிக அதிகளவு மதிப்பெண் வாங்கியவர்களுக்கான படிப்பாக மட்டுமே அது இருந்து வருகிறது. எனினும், MBBS என்கிற ஒரேயொரு படிப்பிற்கு மட்டும், நாம் முயற்சி செய்வதைத் தாண்டி, மருத்துவத்தில் உள்ள மற்ற படிப்புகளிலும் கவனம் செலுத்தினால், சீட் கிடைக்கும் வாய்ப்பு சற்றே அதிகரிக்கும். MBBS போலவே, அதே காலஅளவில் உள்ள மாற்று மருத்துவம் சார்ந்த சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி ஆகியவற்றின் மருத்துவப் பட்டப் படிப்புகளும் சமீப ஆண்டுகளில் புகழ்பெற்று வருகின்றன.
தவிர, BDS எனப்படும் பல் மருத்துவப் படிப்பு, MBBS சொல்லித்தரப்படுகிற கல்லூரிகளைவிட, சற்று அதிகமான கல்லூரிகளில், தமிழகத்தில் உள்ளதால், இவற்றில் சீட் கிடைக்கும் வாய்ப்பு சற்றே அதிகம். கூடவே, B.Pharm எனப்படும் மருந்தியல், B.Sc(Nursing), B.P.T எனப்படும் பிசியோதெரபி, கண் மருத்துவம் சார்ந்த ஆப்டோமெட்ரி ஆகியவையும், மருத்துவம் சார்ந்த நாம் கவனிக்க வேண்டிய படிப்புகளாகும்.

மருத்துவத்தில், மனிதர்களுக்கான மருத்துவம் தாண்டி, கால்நடைகளுக்கான மருத்துவம், காலம்காலமாக புகழ்பெற்ற ஒன்றாகும். B.V.Sc. எனப்படும் வெர்ட்னரி சயின்ஸ் படிப்பு, சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியிலும், இந்தப் பல்கலையின் கீழ் இயங்கும் நாமக்கல் கல்லூரியிலும் சொல்லித் தரப்படுகிறது. தவிர, B.F.Sc. எனப்படுகிற மீன்வளம் சார்ந்த விஷயங்களை பட்டப் படிப்பாக சொல்லித் தருவதற்கென, தூத்துக்குடியில் அரசு மீன்வளக் கல்லூரி ஒன்றும் உள்ளது. இந்தக் கல்லூரியும், கால்நடை மருத்துவப் பல்கலையின் கீழ்தான் செயல்படுகிறது. இது, சமீப ஆண்டுகளில் வரவேற்பை பெற்றுவரும் இன்னொரு புதிய படிப்பாகும்.

வேளாண் துறை சார்ந்த படிப்பான B.Sc. (Agriculture), எப்போதுமே வரவேற்புள்ள ஒரு படிப்பாகும். கோவையிலுள்ள வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ், கோவையில் மட்டுமல்லாது, திருச்சி, பெரியகுளம் என பல்வேறு இடங்களில் உள்ள உறுப்புக் கல்லூரிகளிலும், இந்தப் படிப்பு சொல்லித் தரப்படுகிறது. வேளாண் கல்லூரிகளில், சமீப ஆண்டுகளில் அதிகம் நாடப்படும் இன்னொரு படிப்பு, Horticulture எனப்படும் தோட்டக்கலை சார்ந்த படிப்பாகும்.
தவிர, கோவை வேளாண் பல்கலையில், ஒருசில சிறப்பு இன்ஜினியரிங் பட்டப் படிப்புகளும் சொல்லித் தரப்படுகின்றன என்பது பலர் அறியாத செய்தி. B.Tech(BioTechnology), Food Process Engineering, Agricultural IT போன்ற இந்த இன்ஜினியரிங் படிப்புகளுக்கு, நீங்கள் நேரடியாக கோவை வேளாண் பல்கலைக்கு, தனியாக ஒரு விண்ணப்பம் போட வேண்டும்.

ஒரு காலத்தில், அரசியலில் நுழைய வேண்டுமானால், அதற்கு சட்டக் கல்லூரியில் சேர்வதானது, பாஸ்போர்ட் எடுப்பது போன்றது என்ற கருத்து இருந்து வந்தது. ஆனால், இடையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டு, மீண்டும் சமீப ஆண்டுகளில் சட்டப் படிப்பிற்கான மவுசு கூடிவருகிறது. சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களிலுள்ள அரசு சட்டக் கல்லூரிகளில், ஐந்தாண்டு சட்டப் படிப்பில் சேர +2வில் நீங்கள் எந்த குரூப் எடுத்திருந்தாலும் போதுமானது.
இப்படியான தொழிற் படிப்புகளுக்கான கல்லூரிகள் ஒருபுறம் இருந்தாலும், B.A., B.Sc., B.Com. போன்ற படிப்புகளை வழங்கும் கலை அறிவியல் கல்லூரிகளும், நூற்றுக்கணக்கில் புகழ்பெற்று விளங்குகின்றன. எனினும், இந்தக் கலை அறிவியல் கல்லூரிகள், ஒரு காலத்திலிருந்த வழக்கமான படிப்புகளிலிருந்து மாறுபட்டு, இன்று நிறைய புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. சொல்லப்போனால், இன்ஜினியரிங் கல்லூரியிலுள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோடெக்னாலஜி போன்றவை, B.Sc. படிப்புகளாக, கலை அறிவியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தவிர, சயின்ஸ் பாடங்களில்கூட, சிறப்புத் துறைகளாக மைக்ரோபயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, பிளான்ட் பயாலஜி என சிறப்பு பட்டங்கள் தரப்படுகின்றன. சத்துணவு, இந்திய சுற்றுலா, ஹோம் சயின்ஸ், உளவியல் என பெண்களை மையப்படுத்தி, நிறைய சிறப்பு பட்டப் படிப்புகள், குறிப்பாக, மகளிர் கல்லூரிகளில் சொல்லித்தரப்படுகின்றன.

கலை, அறிவியல் கல்லூரிகளில் மிகவும் பிரபலமான இன்னொரு படிப்பு B.Com. என்றாலும், அதோடு சேர்ந்த படிக்க வேண்டிய இன்னும் சில கோர்ஸ்களை நம் மாணவர்கள் கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். அதாவதாக, சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் எனப்படும் CA, காஸ்ட் அக்கவுன்டன்ட் எனப்படும் ICWAI மற்றும் கம்பெனி செக்ரட்டரி எனப்படும் ACS ஆகிய மூன்றும்தான் அவை.
ஒருகாலத்தில், பட்டப் படிப்பை முடித்தப் பிறகுதான், இவற்றை முயற்சி செய்யவே முடியும். ஆனால் இன்று, +2 முடித்து பட்டப் படிப்பில் சேர்ந்தவுடனேயே இவற்றுக்கான தொடக்கநிலைத் தேர்வுகளை எழுத முடியும் என்பதால், பட்டப் படிப்பை படித்துக்கொண்டே ஒரே நேரத்தில், இந்தத் தேர்வுகளையும் எழுதுவதால், மூன்றாண்டு காலம், விரயமாகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதை, ஒரு காலத்தில், பல வீடுகளில் அனுமதிக்கவே மாட்டார்கள். ஆனால் இன்று, திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அத்தனைப் படிப்புகளும், தொலைக்காட்சித் துறைக்கும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதால், அந்த எதிர்ப்பு நிலை மாறியுள்ளது. சென்னை அரசு திரைப்படக் கல்லூரியில், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் டிப்ளமோ படிப்பு சொல்லித் தரப்படுகிறது. அதேபோல், சென்னை அடையாறில் உள்ள அரசு இசைக் கல்லூரியில், இசை மற்றும் நடனம் சார்ந்த பல்வேறு பிரிவுகளில் படிப்புகள் சொல்லித் தரப்படுவதோடு, இன்று பல்வேறு மாவட்ட தலைநகரங்களிலும் அரசு இசைக் கல்லூரிகள் உள்ளன.

உங்களின் ஓவியத் திறமையை மட்டுமே வைத்து பட்டப் படிப்பில் நுழையும் வாய்ப்பு உள்ளது தெரியுமா? சென்னை எழும்பூரிலுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு ஓவிய நுண்கலைக் கல்லூரியிலும், கும்பகோணத்திலுள்ள இதே அரசுக் கல்லூரியிலும் BFA எனப்படும் Fine Arts பட்டப் படிப்பு, பல்வேறு சிறப்பு பிரிவுகளில் சொல்லித் தரப்படுகிறது. இதில் சேர, உங்களது ஓவியத் திறமையைப் பரிசோதிக்கும் நுழைவுத்தேர்வு ஒன்று நடத்தப்பட்டு, அதன்மூலம் நீங்கள் சேர்க்கப்படுவீர்கள். இரண்டுமே அரசுக் கல்லூரிகள்  என்பதால், கல்விக் கட்டணமும் மிகக் குறைவுதான். இன்று தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்று விளங்கும் பல்வேறு ஆர்ட் டைரக்டர்களும் இக்கல்லூரிகளின் மாணவர்களே!

சமீப ஆண்டுகளில் பலரது கவனத்தையும் ஈர்த்துவரும் படிப்புகளில், முக்கியமான இன்னொரு படிப்பு பேஷன் டெக்னாலஜி. சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக் கல்லூரியான NIFT எனப்படும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன் டெக்னாலஜி, அகில இந்திய அளவில் புகழ்பெற்ற ஒரு கல்வி நிறுவனமாகும். இங்கு பல்வேறு பிரிவுகளில் ஆடை வடிவமைப்பு, ஆடை உற்பத்தி போன்ற டிசைனிங் கோர்ஸ்கள், பட்டப் படிப்புகளாக சொல்லித் தரப்படுகின்றன.

சமையல் சார்ந்த படிப்பான கேட்டரிங் டெக்னாலஜி, ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பும், எப்போதுமே நேரடி வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் படிப்புகளாகும். ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், கப்பல், விமானம் என உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து வேலைபார்க்கும்  வாய்ப்பை கேட்டரிங் படிப்புகள் தருவதால், அதுசார்ந்த ரசனை உள்ளவர்கள் தாராளமாக தேர்ந்தெடுக்கலாம். அதேபோல், பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் விளம்பரம் என, ஊடகத்துறை வளர்ச்சி, இன்று சிறப்பாகவே இருந்து வருவதால், மீடியா படிப்புகளான B.Sc. Visual Communication, Mass Communication, Public Relations, Journalism, Electronic Media போன்ற பட்டப் படிப்புகளும், நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய படிப்புகளாகும்.
எனவே, காலங்காலமாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரேமாதிரியான படிப்புகளையே தேர்ந்தெடுக்காமல், உங்கள் ரசனை மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு, வித்தியாசமான ஒரு பட்டப் படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பதே சிறப்பான அமையும்.

                                                                        - ரமேஷ் பிரபா
                                                                          கல்வியாளர்

வியாழன், 5 நவம்பர், 2015

டெல்லி ஐஐடி-யில் எம்பிஏ சேர ஆசையா இருக்கா?

சென்னை: டெல்லி ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் எம்பிஏ படிப்பு சேர்வதற்கு அருமையான வாய்ப்புக் கிடைத்துள்ளது. எம்பிஏ பொதுப் பிரிவில் படிக்க முடியும். இது இரண்டு ஆண்டு படிப்பாகும். மேலும் டெலிகாம் துறையில் எம்பிஏ படிப்புகளையும் ஐஐடி அறிமுகம் செய்யவுள்ளது. 2016-ம் ஆண்டில் இந்த படிப்புகல் தொடங்கும்.
 
IIT Delhi Offers Admissions for MBA Programmes

எம்பிஏ பொதுப் படிப்பில் சேர விரும்புபவர்கள் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலே போதுமானது. மேலும் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இந்த படிப்பை முடித்திருக்கவேண்டும். எம்பிஏ டெலிகாம் படிப்பு படிக்க விரும்புபவர்கள் பொறியியல், டெக்னாலஜி, ஆர்க்கிடெக்சர், பார்மசி, பிஎஸ்சி அக்ரிகல்ச்சுரல் என்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் பிஎஸ்சி இயற்பியல், வேதியல், கணித பட்டப் படிப்புகளில் ஒன்றை முடித்திருக்கவேண்டும். புள்ளியியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், எலக்ட்ரானிக் சயின்ஸ், என்விரான்மென்டல் சயின்ஸ், ஆப்பரேஷன் ரிசர்ச், கம்ப்யூட்டேஷ னல்/இன்பர்மேஷன் சயின்ஸ் பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்கவேண்டும். இந்த படிப்பை படிக்க படிக்க விரும்புவோர் ஐஐடி டெல்லி இணையதளத்தைத் தொடர்புகொணன்டு ஆன்-லைனில் விண்ணப்பிக்கவேண்டும். சிஏடி தேர்வு அடிப்படையில் தேர்வு இருக்கும். சிஏடி தேர்வு முடிவுகள் 2016 ஜனவரி 2-வது வாரத்தில் வெளியாகும். அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகத் தேர்வு மார்ச் 10-ம் தேதி இருக்கும். தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் 2015 மே மாதம் வெளியாகும். வகுப்புகள் 2016 ஜூலை 25-ம் தேதி தொடங்கும்.
 
http://www.iitd.ac.in/
http://tamil.careerindia.com/news/iit-delhi-offers-admissions-mba-programmes-000757.html



துபாயில் மில்லத் கல்வி அறக்கட்டளை நடத்தும் IAS கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி



அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றோம்.

உங்கள் பிள்ளைகள் IAS & IPS அதிகாரிகளாக ஓர் அறிய வாய்ப்பு

பேரன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
பதினைந்தாயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நமதூரில் 1992 -  பிறகு ஒரு IAS(கலெக்டர்) கூட உருவாக வில்லையே  ஏன்? நமதூரில் மாணவ/மாணவிகளுக்கு பஞ்சமா? இல்லை IAS பற்றிய சரியான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் இல்லையா? இதோ உங்களுக்காக

மில்லத் கல்வி அறக்கட்டளை  நடத்தும்
IAS கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
IAS GUIDANCE AND MOTIVATION PROGRAM

இடம் :  பழைய ஹைதராபாத் ஹோட்டல் , அல் ஜாஸ் கடைக்கு அருகில், DERIA - DUBAI .
இன்ஷாஅல்லாஹ் நாள் : 7/11/2015 , சனி கிழமை (முஹர்ரம்  பிறை 25 1437) நேரம் : இரவு 8:00 மணிக்கு

சிறப்பு பேச்சாளர்

பேராசிரியர், முனைவர் .ஜனாப். சேமுமு முகமதலி., அவர்கள்
எஸ்-ஐஏஎஸ் அகாடமியின் செயல் இயக்குநர் மற்றும் இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியர்.
தலைமை
ஜனாப்.K.P.அப்துல்லா பாஷா, Bsc .அவர்கள் , Honorable Thesaurus, மில்லத் கல்வி அறக்கட்டளை, LBK.

முன்னிலை
ஜனாப்.A. அப்துல் பாரி ,அவர்கள் , chairman ,மில்லத் கல்வி அறக்கட்டளை. LBK.
ஜனாப்.A.ஜவஹர் அலி , BE அவர்கள் , Honorable chairman,மில்லத் கல்வி அறக்கட்டளை. LBK.


நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்,(இன்ஷாஅல்லாஹ் )
Ø  IAS - பற்றிய தவறான எண்ணங்களை களைந்து தன்னம்பிக்கையை விதைப்பது.
Ø  IAS ஆவதற்கான தேவைகளும் படிப்படியான வழிமுறைகள் என்ன என்பதை பற்றி விளக்குவது.
Ø  IAS அதிகாரிகளின் கடமைகளும் ,பொறுப்புகளும் என்ன என்பதை பற்றி விளக்குவது.
Ø  உங்கள் பிள்ளைகள் IAS/IPS ஆக  பள்ளிப்பருவத்திலிருந்தே தயாராகுவது எப்படி?
Ø  அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடை பெறும்.
IAS படிக்க ஆர்வம் இருந்தும் அதுவெல்லாம் நமக்கு சாத்தியமா என்று நினைப்பவருக்கு நிச்சயம் இந்த நிகழ்ச்சி பயன் உள்ளதாக அமையும்.

இறைநம்பிக்கையும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும் இன்ஷாஅல்லாஹ் நீங்களும் IAS/IPS ஆகலாம்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ/மாணவிகள் , பெற்றோர்கள் , ஆசிரியர்கள் ,சமுக அக்கறை கொண்டவர்கள் மற்றும் IAS பற்றிய ஆர்வம் உள்ளவர்கள், கட்டாயம் கலந்து கொள்ளவேண்டிய நிகழ்ச்சி. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

இவன்
மில்லத் கல்வி அறக்கட்டளை.LBK
www.millathtrust.blogspot.com

இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைமுறையை தலை சிறந்த உயர்படிப்புகள் படித்த தலைமுறையாக்கிட  ஒருங்கிணைந்து கல்விச்சேவை செய்வோம்.
More Details 
Javith Basha - 0097150 1262063
VMN Shahul Hameed - 0097155 7429108